Fashion

சேலைகளில் புதுவரவு

By  | 

சேலைகளில் தினமும் புதுப்புது டிசைன்கள், ரகங்கள் அறிமுகமாகிக் கொண்டேதான் இருக்கின்றன. சமீப காலங்களில் அறிமுகமாகியிருக்கும் சேலைகளைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? வாங்க பார்க்கலாம்.

01 செமி காதிபட்டு:
உடல் முழுவதும் மென்மையான நிறங்களில் அழகான பிரிண்டுகள் இருந்தால் முந்தானையானது கான்ட்ராஸ்ட் அடர் நிறத்தில் அட்டகாசமாக இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இந்தச் சேலையுடனேயே கான்ட்ராஸ்ட் நிறத்தில் ப்ளவுஸும் இணைக்கப்பட்டிருப்பது அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளது. கலம்காரி டிசைன்களில் பிரிண்ட்டுகள், பிளெயின் உடலுக்கு பிரிண்டட் பல்லு அல்லது பிளெயின் உடலுக்கு கோடுகளில் பல்லு, ஷேடோ பிரிண்டுகள் என்று பார்ப்பதற்கே மிகவும் ரிச்சான தோற்றத்தைத் தருவதாக உள்ளன இந்தச் சேலைகள்.

02 ஜம்தானி சேலைகள்:
அணிந்தால் ஸ்டைலிஷாகவும், கௌரவமான தோற்றத்தைத் தருவதாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் விலை குறைவாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? அப்பொழுது நிச்சயமாக உங்கள் தேர்வு ஜம்தானி சேலைகளாகத்தான் இருக்க முடியும். இரண்டு விரல் அகலம் முதல் கை அகலம் வரை ஜரிகை பார்டர்கள் வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும் இவ்வகைச் சேலைகள் சிறு விழாக்கள் மற்றும் கோவில்களுக்கு அணிந்து செல்ல ஏற்றவையாக இருக்கும்.

03 சில்வர் ஜரி மற்றும் இரட்டை போர்டர் சேலைகள்:
சில்வர் ஜரியானது உடலில் கோடுகளாக வர பூக்கள் உடல் முழுவதும் பிரிண்ட் செய்யப்பட்டு, சில்வர் ஜரி போர்டர்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தச் சேலைகளின் வண்ணச் சேர்க்கையை என்னவென்று வர்ணிப்பது? பிளவுஸ்கள் சேலைகளுடன் இணைக்கப்பட்டிருப்பதால் அவற்றை தனியாக தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. சேலையின் மேல்பக்கம் சிங்கிள் போர்டருடனும், சேலையின் கீழ்ப்புறம் டபுள் போர்டருடனும் இக்கத் மற்றும் வொர்லி பிரிண்ட்டுடன் வரும் சேலைகளின் வண்ணக்குவியலை என்னவென்று வர்ணிப்பது? பல்லுவும், போர்டரும் ஒரே மாதிரி டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் வருவது மனதைக் கொள்ளை கொள்ளும் விதமாக உள்ளது.

04 பகல்புரி புடவைகள்:
உடல் முழுவதும் வொர்லி பிரிண்ட்டுகள், பிரிண்ட் செய்யப்பட்ட வண்ணத்திலேயே முந்தியானது வெறும் கோடுகளாக இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பது அட்டகாசமாக இருக்கின்றது. பகல்புரி சேலைகள் மிகவும் மென்மையாக இருப்பதால் அவற்றை துவைத்து உடுத்தினாலே போதுமானது. இஸ்திரி போடவோ, கஞ்சி போட்டு உடுத்த வேண்டிய அவசியமே இல்லை.

05 ஷேட்டின் போர்டர்களுடன் வரும் டிஜிட்டல் பிரிண்ட் சேலைகள்:
லினன் பேஸில் அமைந்திருக்கும் இந்தப் புடவைகளில் பூக்கள் கொத்துக் கொத்தாக பிரிண்ட்டு செய்யப்பட்டிருப்பதை தொட்டுப் பார்க்கும் பொழுது மென்மையான பூக்களைத் தொடுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. இந்தச் சேலைகளில் ஷேட்டின் போர்டர் அமைந்திருப்பது மற்றுமொரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இவ்வகைச் சேலைகள் அணிவதற்கும், பராமரிப்பதற்கும் எளிதாக இருப்பது மற்றொரு கூடுதல் சிறப்பம்சம் என்றே சொல்லலாம்.

06 இரட்டை பிளவுஸ்களுடன் வரும் மென் பருத்திச் சேலைகள்:
பெரும்பாலும் பிளையின் வெள்ளை நிறத்தில் அழகான சில்வர் ஜரிபோர்டர் அத்துடன் அரை இன்ச்சில் கான்ட்ராஸ்ட்டான வண்ண போர்டருடன் இரண்டு விதமான பிளவுஸ்களுடன் வந்திருக்கும் இவ்வகைச் சேலைகளை என்னவென்று சொல்வது? ஒரு பிளவுஸ் சின்தடிக்கிலும், மற்றொரு பிளவுஸ் கொட்டனிலும் இருப்பது கூடுதல் சிறப்பாகும். அதிலும் ஒரு பிளவுஸ் கான்ட்ராஸ்ட் வண்ணத்தில் பிரிண்ட்டுகள் செய்யப்பட்டும், மற்றொரு பிளவுஸ் மென்மையான வண்ணத்தில் கட்டங்களாக வடிவமைக்கப்பட்டிருப்பதும் கூடுதல் சிறப்பம்சமாக உள்ளது.

You must be logged in to post a comment Login