General

சைக்கிள் ஓட்டுபவர்!

By  | 

தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் உலக பொருளாதாரமே சீரழியும்.
ஆச்சரியமா இருக்கா?
தொடர்ந்து முழுவதுமாக படிங்க….


ஏன்னா அவன் கார் வாங்கமாட்டான்… அதற்காக கடன் வாங்கவும் மாட்டான்… வட்டியும் கட்ட மாட்டான்…
பேங்க் ஃபைனான்ஸ் கம்பெனிக்கு ஒரு சதம் கூட பிரயோசனம் இல்லாதவன்.
கார் இன்சூரன்ஸ் பண்றதுக்கு வரமாட்டான்.
இந்த பெட்ரோல், டீசல்….. ம்ஹ_ம்… வாய்ப்பே இல்ல!
இவனால அமெரிக்கா, சவூதி அரேபியாவுக்கும் கூட எந்த பயனும் இல்ல.
சர்வீஸ், ஸ்பேர் பார்ட்ஸ் எதற்கும் இவன் செலவு செய்யறது இல்ல.
பார்க்கிங் கட்டணம்னு பெருசா எங்கேயும் செலுத்தமாட்டான்.
இதெல்லாம் போய்த் தொலையட்டும்னு விட்டா…
இவனுக்கு சுகர் வராது…
இதய நோய் வராது…
குண்டாகவும் மாட்டான்…
ஆஸ்பத்திரி, டாக்டர், மருந்துக்கடை இதெல்லாம் இவனுக்குத் தேவையே இல்லை…
உலக பொருளாதாரம் வளர இவன் எதுவும் செய்யமாட்டான்…!

You must be logged in to post a comment Login