General

‘டிக்- டாக்’ செய்த பெண்களுக்கு சிறை

By  | 

மத்திய கிழக்கு நாடான எகிப்தில், இரண்டு பெண்கள் நடனமாடி, மொபைல் போனின், ‘டிக் -டாக்’ செயலியில் பதிவிட்டனர்.
இவர்கள் மீது, அந்நாட்டு அரசு வழக்குப்பதிவு செய்தது. அதை விசாரித்த நீதிமன்றம், எகிப்திய குடும்பங்களின் மதிப்பு மற்றும் மரியாதைக்கு, அந்த பெண்கள் பங்கம் விளைவித்ததாக கூறி, அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும், தலா, 14 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
இந்த உத்தரவுக்கு, அந்நாட்டில், கடும் கண்டனங்கள் எழ துவங்கியுள்ளன.

You must be logged in to post a comment Login