General

தனிமை

By  | 

தனிமையில் இருக்குமாறு விடப்பட்டால் மனிதர்களில் பலர் வருத்தமடைகிறார்கள். இன்று உலகம் முழுவதுமே தனிமையை சந்தித்திருக்கிறது. கூட்டத்தில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்களுக்குத் தனிமை கடும் தண்டனை ஆகிவிடுகிறது.
கூட்டத்தில் விடப்பட்டால் வேறு சிலர் பதற்றமடைந்து தவிக்கிறார்கள். வாகனச் சத்தமும் மனிதர்களின் கூச்சலும் பேச்சும் அவர்களால் தாங்க முடியாதவையாக இருக்கின்றன.


அபூர்வ மனிதர்கள் வேறு சிலர் இருக்கிறார்கள். கூட்டத்தில் இருந்தாலும் தனிமையில் இருந்தாலும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். ஏனெனில், கூட்டத்திலும் தனிமையிலும் அவர்கள் மகிழ்ச்சியை வெளியே தேடுவதில்லை. தங்களுக்குள்ளேயே தேடி அடைகிறார்கள்.

You must be logged in to post a comment Login