Mother

தாய்ப்பால் கட்டி கொள்ளும் பிரச்சினையை தவிர்க்க…

By  | 

தாய்ப்பால் கட்டிக்கொண்ட இடத்தில் சிறியதாக நறுக்கிய உருளை கிழங்கை வைத்து சிறிய துணியால் கட்டுவிடுங்கள். இது 1 மணிநேரம் இருக்க வேண்டும். இதனால் தாய்ப்பால் கட்டும் பிரச்சினை நீங்கும்.

தாய்மார்களுக்கு தாய்ப்பால் கட்டிக்கொண்டால் வெந்நீர் வைத்து மார்பு பகுதியின் மேல் மெதுவாக மசாஜ் செய்து தாய்ப்பாலை வெளியில் அகற்றலாம். வெந்நீர் வைத்து மசாஜ் செய்வதால் தாய்ப்பால் கட்டிக்கொள்ளும் பிரச்சினை விரைவில் குணமாகும்.

முதலில் 2 கப் அளவிற்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு நீரை கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீருடன் கற்றாழை சேர்த்து 10 அல்லது 15 நிமிடம் கொதிக்கவிட வேண்டும். கற்றாழை தண்ணீர் நன்றாக கொதித்து வந்த பிறகு ஒரு துணியால் தண்ணீரில் நனைத்து தாய்ப்பால் கட்டிக்கொண்ட மார்பு பகுதியில் 15 நிமிடம் நன்றாக மசாஜ் செய்வது போல் தடவி வரவேண்டும். இந்த முறையை பின்பற்றினால் தாய்ப்பால் கட்டும் பிரச்சினையை தவிர்க்கலாம்.

தாய்ப்பால் கட்டி இருக்கும் இடத்தில் தேங்காய் எண்ணெயை மசாஜ் போல் செய்து வர வேண்டும். மார்பக பகுதிகளில் உண்டாகும் காயங்களில் கூட இந்த தேங்காய் எண்ணெயை தடவி வந்தால் மார்பக காயங்களும் விரைவில் ஆறும்.

மார்பு பகுதியில் தாய்ப்பால் கட்டி உள்ளவர்கள் தினமும் 1 கப் அன்னாசி பழ சாறு எடுத்துக்கொள்ளலாம். அன்னாசியில் இருக்கும் ஃப்ரோமெலைன் மார்பகத்தில் உள்ள வீக்கத்தை குறைத்து அடைத்து இருக்கும் மார்பக குழாய்களை சரி செய்யும்.

தாய்ப்பால் கட்டி பிரச்சினை உள்ள தாய்மார்கள் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை பூண்டை மசித்து சாப்பிட்டு வரவேண்டும். பச்சை பூண்டு சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். அதனால் பூண்டுடன் சிறிதளவு தேனில் ஊறவைத்து சாப்பிடலாம்.

You must be logged in to post a comment Login