Health

தினம் ஒரு கப் பூண்டு டீ

By  | 

நாம் தினமும் அருந்தும் தேநீருக்கு பதிலாக பூண்டு தேநீரை நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன என்று கூறினால் உங்களால் நம்ப முடிகின்றதா? அது மட்டுமின்றி நீரிழிவு நோயாளிகளுக்கு இது பெரும் பலனை அளிக்கிறது. உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை தீர்மானிக்க பூண்டு சேர்த்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று எப்போதாவது நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? இதைக் குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

நீரிழிவு பிரச்சினை இப்பொழுது நிறைய பேருக்கு இருப்பதை நாம் அறிய முடிகிறது. மேலும் நாம் உண்ணும் உணவு நமது உடலில் ரத்த சர்க்கரை அளவோடு தொடர்புடையது. நீரிழிவு பிரச்சினை உலகில் பெரும்பாலானோருக்கு இருக்கும் ஒரு நோயாகும். இது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை உயர்த்துகிறது. இந்நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இது நமது உடலில் சிறுநீரகம் மற்றும் இதயம் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கிறது. இந்த நோய்க்கு நிரந்தர தீர்வு என்று ஒன்று இல்லை என்றாலும், நாம் முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, இது போன்ற உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம். இயற்கை முறையில் இந்த பிரச்சினையை சரி செய்யக்கூடிய வழிகள் பல உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த பூண்டு தேநீர்.

​பூண்டு டீ
பெரும்பாலும் வீடுகளில் பூண்டு ஒரு முக்கிய உணவு பொருளாக பயன்படுத்தப்படுகின்றது. மேலும் இந்த பூண்டில் மருத்துவ குணங்களும் அதிகமாக நிரம்பி இருப்பதால், இவை சமையல்களில் அதிகம் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. நமது ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை குறைப்பதற்கு இந்த பூண்டு உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.

பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பூண்டு நல்ல ஒரு மருந்தாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. டைப் 2 நீரிழிவு நோயாளிகள், தினமும் காலையில் பூண்டு தேனீரை சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். மேலும் பின்வரும் காரணங்களால் இந்த பூண்டில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதற்கான வழிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

​பூண்டு டீயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
பூண்டு தேநீர் என்பது, பூண்டு, இஞ்சி மற்றும் இடிக்கப்பட்ட மிளகு ஆகியவற்றின் கலவை ஆகும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு பல நன்மைகளை தருகிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இந்தப் பூண்டு தேநீரில் நீரிழிவு நோயாளிகளுக்கு பயன் தரக்கூடிய பல நன்மைகள் உள்ளன. அவை

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஆண்டி-பயாடிக் மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் அடங்கியுள்ளன.

தேவையற்ற கொழுப்பின் அளவை குறைத்து, இருதயம் சார்ந்த நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகப்பெரும் ஆபத்து காரணியாக இருக்கும் அமினோ அமில ஹோமோசிஸ்டீனை குறைக்கிறது.

இயற்கையாகவே பூண்டில் நிறைந்துள்ள விட்டமின் சி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆரோக்கியமான உறுப்பு செயல்பாட்டிற்கு உதவுகிறது.

 

​பக்க விளைவுகள்
எந்த ஒரு உணவும் அளவாக உட்கொள்ளப்படும் போது மட்டுமே அது பயனளிக்கும். அதேபோல் இந்தப் பூண்டையும் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்கவும். அதிகமாக உட்கொள்ளப்படும் பூண்டு, வேறு சில உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். அதிகப்படியான பூண்டு உட்கொள்ளப்படும் பொழுது, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். மேலும் பூண்டு சேராத ஒரு சிலருக்கு வாயுதொல்லை போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.

​நிரந்தர தீர்வு கிடைக்குமா?
ரத்தத்தில் சர்க்கரையை குறைக்க விரும்பும் ஒருவருக்கு குறுகியகால தீர்வாக இந்த பூண்டு தேநீர் இருக்கும். இதே சமயத்தில் நீரிழிவு போன்ற பிரச்சினைகளில் விருந்து விடுபட மற்ற சில வாழ்க்கை முறை மாற்றங்களையும் செய்ய வேண்டும். இந்த பூண்டு தேநீர் மட்டுமே நீரிழிவு நோயிலிருந்து நம்மை பாதுகாக்காது. பூண்டு தேநீர் அருந்துவது நீரிழிவு நோயாளிகளுக்கு பல்வேறு நன்மைகளை அளித்தாலும், நாம் இதை தேவையான அளவு மட்டுமே உட்கொள்ள வேண்டியது அவசியம்.

You must be logged in to post a comment Login