Health

திராட்சை!

By  | 

திராட்சை பழத்தில், சர்க்கரை, காபோஹைட்ரேட், டெக்ஸ்டாசிரஸ், ப்ரெக்டொஸ், பெக்டின் மற்றும் பார்டாரிக், மாலிக், சிட்ரிக் அமிலங்கள், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.


தினமும், திராட்சை சாறு குடித்து வந்தால், தேவையான, ‘விட்டமின் – சி’ கிடைக்கும். இது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ரத்தத்தை சுத்திகரிக்கும்; ஆஸ்துமாவினால் ஏற்படும் அவஸ்தையை குறைக்கும்.
தினமும் உடற்பயிற்சி செய்தவுடன், திராட்சை சாறு குடித்து வந்தால், உடல் எடை குறையும்; ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். இதயதசை மேன்மையடையும்.
உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி மலரும். திராட்சையை கூழாக்கி, முகத்தில் பூசிவந்தால், சருமம் பொலிவு பெறும்.

You must be logged in to post a comment Login