Entertainment

திருமண பட்ஜெட்

By  | 

தினேஸ் வெளிநாட்டில் இருந்து தனது காதலியை திருமணம் செய்வதற்காக வந்திருந்தான். இவன் கருணைமனம் கொண்டவன்.

தினேஸின் காதலி பவித்ரா சிறிது ஆடம்பர வாழ்வில் நாட்டம் கொண்டவள், தினேஸ் தனது திருமணத்தை குறைந்த செலவில் செய்ய எண்ணி இருந்தான். இதை அவளுக்கு புரியவைக்க எண்ணி தன் காதலியிடம் திருமணத்திற்கான பட்ஜட்டை தயாரிக்குமாறு கேட்டான்.

அவனும் தன்னுடைய பட்ஜெட்டை தயாரித்திருந்தான். பவித்ராவின் பட்ஜெட் 15 லச்சத்தை எட்டியிருந்தது. தினேஸின் பட்ஜெட் 5 லச்சம் தான். புரியாமல் நின்ற பவித்ராவிடம், தினேஸ் இவ்வாறு விளக்கினான்.

”உன் பட்ஜெட்டில் இருந்து என் பட்ஜெட்டை குறைத்தால் 10 லச்சம் மிகுதியாகிறது. இதை உன்னை எனக்கு தந்த கடவுளுக்கு காணிக்கையாக ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு கொடுக்கலாம் என நினைக்கின்றேன். ஒருநாளில் மறைந்து போகும் ஆடம்பரத்தை விட அத்தியாவசிய தேவைகளுக்காக ஏங்கும் குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும், நீயும் இதை விரும்புவாய் என எண்ணுகின்றேன்.” என்றான்.

வார்த்தைகள் மௌனமாக அவன் மார்பை கண்ணீரில் நனைத்தால் பவித்ரா.

You must be logged in to post a comment Login