Cookery

தேங்காய் போளி

By  | 

தேவையான பொருள்கள்:

கோதுமை மா – 200 கிராம்

உப்பு – தேவைக்கேற்ப

மஞ்சள்தூள் – சிறிதளவு

நல்லெண்ணெய் – 100 கிராம்

தேங்காய் பூ – 250 கிராம்

சீவிய முந்திரி – 50 கிராம்

சீனி – 300 கிராம்

ஏலக்காய்த்தூள் – சிறிதளவு

நெய் – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை :

  1. முதலில் கோதுமை, உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு பரோட்டா மா போல பிசைந்து, 100 கிராம் நல்லெண்ணெயை மேலே விட்டு 2 மணி நேரம் ஊறவிடவும்.
  2. இதுதான் மேல் மா.
  3. சீனியை ஒரு பாத்திரத்தில் இட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரையவிட்டு கொதிக்க விடவும்.
  4. சீனி கலவை பாகானதும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து, துருவிய தேங்காய் பூ, சீவிய முந்திரி சேர்த்து பூரணமாக கிளறி இறக்கவும்.
  5. ஆறிய பின் ஏலக்காய்த்தூள் சேர்த்து சிறிய ஒரேஞ்சு அளவு எடுத்து உருட்டவும்.
  6. மேல் மாவு சிறிதளவு எடுத்து விரித்து, அதனுள் பூரணம் நிரப்பி மூடி, வாழையிலையில் வைத்து கையால் தட்டி, சூடான தவாவில் போட்டு நெய் – எண்ணெய் கலவை விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

You must be logged in to post a comment Login