Biodata

நட்சத்திரங்களின் வாழ்க்கைத் துணை: மனந்திறக்கிறார் நடிகர் ஜெயம் ரவி

By  | 

சினிமாவில் பல அழகழகு கதாநாயகிகளுடன் ஜோடி போட்ட ‘ஜெயம்’ ரவிக்கு நிஜக் கதாநாயகியை சந்தித்த முதல் பார்வையிலேயே காதல் பற்றிக்கொண்டிருக்கிறது.
அவர் தன் காதல் மனைவி ஆர்த்தி பற்றியும் அவர்களுக்கிடையாக காதல் காலத்தை அசைபோடுகிறார்!

எங்கே? எப்படி?
2006ஆம் ஆண்டு… ஒரு ஃப்ரெண்ட் வீட்டு ஃபங்ஷன்ல முதல் முதலா ஆர்த்தியைப் பார்த்தேன். எங்களோட குடும்பமும் அவங்களோட குடும்பமும் ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடியே நண்பர்கள். இடையில தொடர்பில்லாமப் போச்சு. ஆர்த்தி­யைப் பார்த்ததுமே எனக்கு பல்பு எரிஞ்­சது. நேரா அவங்ககிட்டயே போய், ‘நீ ரொம்ப அழகா இருக்கே… நாம ஃப்ரெண்ட்ஸா இருக்கலாமா’ன்னு கேட்­டேன். ‘எல்லாப் பசங்களும் இப்படித்­­தான் சொல்­வாங்க. கொஞ்ச நாள் கழிச்சு, இதே மாதிரி ஃபீல் பண்ணினா, வந்து சொல்… அப்பப் பார்க்கலாம்’னு சொல்­லிட்டுப் போயிட்டாங்க.
ஒரு வார தவிப்பு அது… பயங்கர பிசியா நடிச்சிட்டிருந்த நேரம்… அத்­ தனை வேலைகளுக்கு இடையிலே­­யும், ஒரு நாளைக்கு ரெண்டு தடவை­யாவது ஆர்த்தி ஞாபகம் வரும். ‘ஏன் இப்படி? இதெல்லாம் உண்­மையா’ன்னு என்னையே நான் கேள்வி கேட்டுப் பார்த்துக்­கிட்டேன். உண்மை­தான்னு மனசு சொன்ன­தும், எப்படியோ ஆர்த்தி நம்பர் கண்டு­பிடிச்சு, பேசிட்டேன். ‘பரவால்­லையே… கௌரவ­­மான பையன­்­­தான் போல’ன்னு அவங்­களுக்கும் என் மேல் நம்பிக்கை வந்தது.

ஆர்த்தி ‘ஐ லவ் யூ’
முதல் சந்திப்புலேயே நான் அவங்­களை லவ் பண்ண ஆரம்பிச்சிருக்­கேன்னு நினைக்கிறேன். அத­னாலோ என்னவோ, ஒரு முறை ஃப்­ரெண்ட்ஸ் கூட சேர்ந்து வெளியே போனப்ப, திடீர்னு என்னையும் அறியாம ஆர்த்தி­கிட்ட ‘ஐ லவ் யூ’ சொல்லிட்டேன்!’’

அச்சச்சோ! அப்புறம்?
நல்லவேளை நான் பயந்த மாதிரி எதுவும் நடக்கலை. உடனே பதில் சொல்லாம, ‘யோசிக்க டைம் வேணும்’னு கேட்டாங்க. அப்புறம் ஒரு மாசத்­துக்குப் பிறகுதான் ஓ.கே. சொன்­னாங்க. அதுவரை செம டென்ஷன்.
ஆறு மாசம் கழிச்சு மெல்ல, என் வீட்­டுக்குத் தெரிய ஆரம்பிச்சது. ஆர்த்தி வீட்டிலேயும் விஷயத்தை சொல்லி­யாச்சு. ரெண்டு குடும்­பங்­களும் ஏற்கனவே அறிமுகமான­வங்கங்­கிறதால எங்கக் காதல் ரெண்டு வீட்லயும் ஓ.கே. ஆச்சு. ஆனால், அப்ப நான் ‘பேராண்மை’ பண்ணிட்டி­ருந்ததால படம் முடியற வரைக்கும் காத்திருந்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம்!

திருமணத்திற்கு பின்னான மாற்றம்
ஒரு நல்ல நாள்ல வாழ்க்கையே தலைகீழா மாறின மாதிரி ஃபீலிங். அத்தனை நாள் வாழ்ந்த அனுபவம் எதுவும் கல்யாணத்துக்குப் பிறகு தேவைப்படலை. மறுபடி பிறந்து, புதுசா வாழ ஆரம்பிக்கிற மாதிரி இருந்தது. என் ரூம்ல, என்கூட இன்­னொரு பெண்ணாங்கிற நினைப்பே புதுசா இருந்தது. கல்யாணத்­துக்கு முன்னாடி வரை என் முடிவுகளை நான்தான் எடுப்பேன். நான் ஆம்பி­ளைங்கிற கர்வத்தோட இருந்­தேன். ‘பொண்டாட்டி சொல்றதை ஏன் கேட்கணும்’னு எனக்குள்ள எக்கச்சக்க ஈகோ. ஒரு கட்டத்துல அது தப்புங்கிறதை உணர்ந­்தேன். ஆர்த்தி­யோட ஒவ்வொரு நடவடிக்கையும் என்னை அப்படி சிந்திக்க வச்சது. ஸ்கொட்­லாந்துல இன்டர்நேஷனல் மேனேஜ்­மென்ட் படிச்ச ஆர்த்தி, விருப்பப்பட்டிருந்தா பெரிய வேலைல செட்டிலாகியிருக்கலாம். ஆனா, கல்யாணத்துக்குப் பிறகு எனக்காக எல்லாத்தையும் தியாகம் பண்ணிட்டு, என் நிழல்ல இருக்கிறதையே விரும்பி ஏத்துக்கிட்டவங்க.
சினிமாவுல நான் பண்ணின கேரக்டர்களுக்கும் நிஜ வாழ்க்கையில என்னோட ஒரிஜினல் கேரக்டருக்கும் கொஞ்சம் கூட ஒற்றுமையே இருக்­காது. யார்கூடவும் கலகலப்பாக பேசிப் பழக மாட்டேன். ‘அது தப்பு… உங்க துறைக்கு நாலு பேர்கிட்ட பேசி, பழ­கறது­­தான் சரி’ன்னு எனக்குப் புரிய­வச்சு, என்னைக் கொஞ்சம் கொஞ்­சமா மாத்­தி­­னதே ஆர்த்திதான். அதுக்கப்­புறம் எனக்கு உலகமே விரிஞ்ச மாதிரி இருந்தது.
நடிகரா இருந்ததால கல்யாணத்துக்கு முன்னாடி நிறைய ஊர் சுத்த முடியலை. ஈ.சி.ஆர்ல டிரைவ் பண்ணிட்டே மணிக்­கணக்கா பேசுவோம். கல்யாணத்­துக்குப் பிறகு ஹனிமூன் பிளான் பண்ணி­னோம். நியூசிலாந்துல 16 நாள் ட்ரிப். எனக்கு வாழ்க்கையில அதுதான் முதல் ஹொலிடே ட்ரிப். அத்தனை நாளும் ‘டைம் டேபிள்’ போட்ட மாதிரி எந்தெந்த நேரம் எந்த இடத்­துக்குப் போறோம், எந்த கார்ல போறோம், எந்த ஹோட்டல்ல தங்கறோம்னு பக்காவா பிளான் போட்டேன். போய் இறங்கினதும் ஆர்த்தி ஷொக் ஆயிட்டாங்க. ‘இதுக்குப் பேர் ஹனிமூன் இல்லை. ஸ்கூல் எக்ஸ்கர்ஷன்’னு சொல்லிட்டு அத்தனை பிளானையும் மாத்தி ஒரே ஹோட்டல்ல நாலஞ்சு நாள் தங்கற மாதிரி மாத்தினாங்க. ‘அட… ஆமாம்ல’ன்னு அப்புறம்தான் என் மண்டைக்கே உறைச்சது. ஹனிமூன்லேயே பல்பு வாங்கின ஹஸ்பென்ட் நானாத்தான் இருப்பேன்!

திருமணத்துக்கு முன், திருமணத்துக்குப் பின் சினிமாவில் காதல் காட்சி
அத்தனை பேருக்கு மத்தியில ரொமான்ஸ் சீன்ல நடிக்கிறதுங்கிறது எவ்வளவு கொடுமைன்னு பக்கத்துல இருந்து பார்த்தால்தான் புரியும். ‘சினிமா வேற… நிஜ வாழ்க்கை வேற’ங்கிறதை ஆர்த்தி புரிஞ்சுக்கிட்டாங்க. கல்யா­ணத்துக்குப் பிறகு ஆர்த்தியை ஷூட்­டிங் ஸ்பாட்டுக்கு கூட்டிட்டுப் போயிட­­றேன். என்கூட நடிச்ச அத்தனை ஹீரோயின்களுக்கும் ஆர்த்தியை அவ்ளோ பிடிக்கும். ஜெனி­லியா சென்னை வந்தா, ஆர்த்தியைப் பார்க்காமப் போக மாட்டாங்க. ‘எனக்கு உன்னைவிட ஆர்த்தியை­தான் ரொம்பப் பிடிக்கும்’னு சொல்வாங்க தமன்னா. இப்படி பழகற எல்லாருக்­குமே அவங்களைப் பிடிக்கும். தெரிஞ்ச­வங்க, தெரியாத­வங்க, பிரபலமான­வங்க, பிரபலமில்லாதவங்கன்னு அவங்களுக்கு எந்தப் பாரபட்சமும் கிடையாது. எல்லார்கிட்டேயும் ஒரே மரியாதை, ஒரே அன்போடதான் பேசுவாங்க, பழகுவாங்க.

பரிமாரப்பட்ட பரிசுகள்
கல்யாணத்துக்கு முன்னாடி ஆர்த்திக்கு டைமண்ட் மாதிரி… ஆனா, டூப்ளிகேட் டைமண்ட் வச்ச மோதிரம் வாங்கித் தந்தேன். கல்யாணத்துக்குப் பிறகு நிஜ டைமண்ட் மோதிரம் வாங்கிக் கொடுத்தேன். அவங்க எனக்கு ஒரு பெர்ஃப்யூம் பாட்டில் பிரெசன்ட் பண்ணினாங்க. ஆனா, நான் அதை உடைச்சிட்டேன். ‘உன் காதல் ரொம்ப வீக்… என் காதல்­தான் ஸ்ட்ராங்’னு அதை வச்சே அடிக்­கடி என்னைக் கலாய்ப்பாங்க. உடைஞ்சு போன அந்த பாட்டிலோட மூடியை இன்னும் நான் பத்திரமா வச்சிருக்­கிறது அவங்களுக்குத் தெரி­யாது. அது மட்டுமில்லை, இன்­னும் மிச்சமிருக்கிற அத்தனை ஜென்மங்களுக்குமான அன்பையும் காத­லையும் மனசுல சேகரிச்சு வச்சி­ருக­்கேன், அத்தனையும் என் ஆர்த்திக்காக..!

என் குழந்தை!
பெயர்ல மட்டுமில்லை தோற்றம், நடவடிக்கைகள்னு எல்லாத்துலயுமே எங்க ரெண்டு பேரோட கலவை ‘ஆரவ்’. ‘அமைதியானவன்’னு அர்த்­தம். 2 வயசு. ஆர்த்தி கன்சீவ் ஆனதும் ஆர்த்தியையும் சேர்த்து எனக்கு ரெண்டு குழந்தைங்களைப் பார்த்துக்­கிற மாதிரி இருந்தது. டெலிவரி டைம்ல பக்கத்துல இருக்கிறதா பிளான்.
‘எங்கேயும் காதல்’ படத்துக்காக பாரிஸ்ல இருந்தேன். ஆனா, டாக்டர் சொன்னதுக்கு 20 நாள் முன்னாடியே ஆர்த்திக்கு பிரசவ வலி வந்திருச்சு. தகவல் தெரிஞ்சதும் எனக்கு இருப்பு கொள்ளலை. ‘உடனே டிக்­கெட் போடுங்க… நான் ஊருக்குப் போகணும்’கிறேன். ‘ரெண்டே ஷாட் மிச்சமிருக்கு. அதை முடிச்சிடுவோம். இல்லைன்னா மறுபடி நீங்க பாரிஸ் வரணும்’னு சொல்லவே, மனசே இல்லாம மேக்கப் கூட போடாம உட்கார்ந்திருந்தேன். நான், பிரபுதேவா, ஹன்சிகா, அவங்கம்மா எல்லாரும் ஒரே கார்ல ஸ்பாட்டுக்கு போயிட்டிருக்கோம். கார்லயே கதறிக் கதறி அழறேன். யாருக்கும் ஒண்ணும் புரியலை. கொஞ்ச நேரத்துல ‘ஆம்பிளைக் குழந்தை பிறந்திருக்கான்’னு போன். ‘குழந்தை எப்படியிருக்கான், யாரை மாதிரி இருக்கான்’னு எதுவுமே கேட்கத் தோணலை. நான் கேட்ட முதல் கேள்வி ‘ஆர்த்தி எப்படியிருக்கா’ங்கிறதுதான்.
அன்னிக்கு ராத்திரி ஷூட்டிங் முடிச்சிட்டு, ஃபிளைட்டை பிடிக்க ஏர்போர்ட்ல காத்திட்டிருக்கேன். ‘டெர்மினல் தீப்பிடிச்சிருச்சு… ஃபிளைட் லேட்டாகும்’னு அடுத்த குண்டைத் தூக்கிப் போடறாங்க. மறுபடி ஏர்போர்ட்ல உட்கார்ந்துட்டு அழறேன். அப்புறம் ஒரு வழியா சமாளிச்சு, அடிச்சுப் பிடிச்சு இந்தியா வந்து ஆர்த்தி முகத்தைப் பார்த்த பிறகுதான் எனக்கு நிம்மதியாச்சு. அதுவரை குழந்தையா தெரிஞ்ச ஆர்த்தி, அந்தக் கணம் எனக்கு தேவதையா தெரிஞ்சாங்க.


ஆரவ் பிறந்த பிறகு எனக்கும் ஆர்த்­திக்குமான நெருக்கம் பத்து மடங்கு அதிகமானது. ஒரு அப்பாவா அவனோட ஒவ்வொரு கட்ட வளர்ச்­சியையும் சுட்டித்தனத்தையும் ரசிக்கி­றேன். என் படங்களை அதிகம் பார்த்த­வன் அவனாதான் இருப்பான். ஆர்த்தி­யோட வயித்துக்குள்ள இருந்தப்­பவே, ‘எங்கேயும் காதல்’ படத்துல வர்ற ‘வள்ளியே… சர்க்கரை வள்ளியே…’ பாட்டு கேட்டா உதைப்பானாம். இப்ப­வும் அதுதான் அவனோட ஃபேவரைட் சோங். ஸ்டார்ட் கேமரா, ஆக் ஷன் எல்லாம் தெரியுது. என்னை ஆள வந்தவன் ஆரவ்!

You must be logged in to post a comment Login