Cookery

நண்டு வடை

By  | 

தேவையான பொருட்கள்:

பெரிய நண்டு  – 1/2 கிலோ

வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 6

மஞ்சள் தூள் – சிறிதளவு

பெ.சீரக தூள் – 1 தேக்கரண்டி

க.பட்டை – 2

இஞ்சி – 2 அங்குலம்

பொட்டுக்கடலை மா – 4 தேக்கரண்டி

சோள மா – 4 தேக்கரண்டி

எண்ணெய் – தேவைகேற்ப

கொத்தமல்லி – 1/2 கட்டு

பிரிஞ்சி இலை – 1

உப்பு – சுவையேற்ப

செய்முறை:

  • நண்டை சுத்தம் செய்து குக்கரில் சிறிது நீர் விட்டு மஞ்சள் பொடி, பிரிஞ்சி இலை ஒன்று சேர்த்து வேக விடவும்.
  • வெயிட் போட வேண்டாம்.
  • நண்டு வெந்தது அதன் தசையை ஒரு கரண்டியால் எடுத்து பாத்திரத்தில் வைத்தக் கொள்ளவும்.
  • அதனோடு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பெ.சீரக தூள், தட்டிய க. பட்டை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பொட்டுக் கடலை மா, சோள மா, உப்பு, ஆய்ந்த கொத்தமல்லி ஆகியவற்றை சேர்க்கவும்.
  • பிரிஞ்சி இலையை எடுத்துவிட்டு இவற்றை ஒன்றாகப் பிசைந்து கையில் எண்ணெய் தொட்டு சிறிய வடைகளாகத் தட்டவும்.
  • இதை எண்ணெயில் சிவக்கப் பொரிக்கவும். எண்ணெயில் பொரிக்கும் போது உடைந்தால் முட்டை ஒன்றை உடைத்துக் கலக்கவும்.
  • உணவோடும், தனியாகவும் பரிமாறலாம்.

சுவஸ்த்திக்கா ரெங்கராஜ்,
கலஹா.

You must be logged in to post a comment Login