Interview

நம்மவர்கள் எதிலும் அக்கறை இல்லாதவர்கள்!

By  | 

 

– பேனட் கிறிஸ்ட்டி

மலையகத்தில் இருந்து சென்று இன்று சர்வதேச ரீதியில் சமையக் கலையில் சாதித்துவரும் பேனட் கிறிஸ்ட்டி அவர்களின் நேர்க்காணல் பின்வருமாறு.

வணக்கம் பேனட் கிறிஸ்ட்டி உங்களைப் பற்றியதொரு சிறிய அறிமுகத்துடன் நேர்காணலை ஆரம்பிக்கலாமே…
வணக்கம் நான் Anthony Rasiah Bernard Christy. எனது சொந்த ஊர் தலவாக்கலை சென் அன்ரூஸ் தோட்டம் ஆகும்.  நான் தலவாக்கலை புனித பாதிரிசியார் கல்லுரியில் சாதாரண தரம் வரை கல்வி கற்றேன். பின்னர் தலைநகரி்ல் அமைந்துள்ள சிலோன் ஹோட்டல் ஸ்கூலில் 6 மாத கற்னைநெறியை முடித்ததோடு… பின்னர் International cookery and pastry and Bakery  கற்கைநெறியையும் முடித்தேன்.

திருமணம் முடித்து இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றார்கள். தற்போது மத்திய கிழக்கு நாடொன்றில் வேலை செய்து வருகின்றேன்.

எப்போதிலிருந்து ஹோட்டல் துறையில் இருக்கின்றீர்கள்?
பாடசாலை கல்வியை முடித்துக் கொண்டு தலைநகருக்கு வந்ததன் பின்னர் சமையல் கலை மீது ஏறபட்ட ஆர்வத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு தொடக்கம ஹோட்டல் துரையில் இருக்கின்றேன்.

சமையல் சார்ந்த துறையில் தற்போது எங்கு எந்த நிலையில் பணியாற்றுகின்றீர்கள்?
தற்போது மத்திய கிழக்கு நாடொன்றில் பணி செய்கின்றேன். இங்கு 2015 ஆம் ஆண்டு (Second commi) இரண்டாம் நிலை சமையல்காரக வந்தேன்.

இன்றைய நிலையில் (CDP Chef de partie) பிரதான சமையல்காரக இருக்கின்றேன்.

சமையலை ஒரு பாடமாகக் கற்றுள்ளீர்களா அல்லது சமையல் கலையின் மீதான ஆர்வத்தில் படிப்படியாக கற்று இந்த நிலைக்கு வந்துள்ளீர்களா ?
சமையல் மீதான ஆர்வம் காரணமாகவே சமையல் சார்ந்த விடயங்கள் பற்றி கற்க ஆரம்பித்தேன்.

அதன் ஆரம்பமாக முதலில் கொழும்பில் உள்ள சுற்றுலா உணவகம் ஒன்றில் சமையல் உதவியாளராக வேலை செய்தேன். பின்னர் சமையல் சார்ந்த துறையில் ஈர்க்கப்பட்டு பகுதிநேரமாக ஹோட்டல் சமையல் படத்தை கற்று கொண்டேன்.

சமையல் கலையில் ஏதேனும் சான்றிதழ்கள் பெற்றுள்ளீர்களா?
ஆமாம்,  நான் வெளிநாட்டில் தொழிலில் இணைந்ததன் பின்னர். 2016 ஆம் ஆண்டு சிறந்த அழகுப்படுத்தலுக்கான (Best display Creative) சான்றிதழ் பரிசு கிடைத்தது .

2017 முதல் 2018 ஆண்டு காலப்பகுதியில் Best Performance & Employee of the Year விருது கிடைத்தது .

மேலும் சமையல் துறை சார்ந்த போடிகளில் பங்குபற்றி 6 க்கும் அதிகமான சான்றிதழ்களை பெற்றுள்ளேன்.

சமையல் கலைஞர் என்கிற நிலையை எப்படி உணர்கிறீர்கள்?சமையல் கலை என்பது ஒரு சேவை. ஒருவருக்கு நாவுக்கு சுவையாக சமைத்து கொடுத்து அவரை சந்தோசப்படுத்துவது என்பது இலகுவான காரியமல்ல. நான் என் துறைசார்ந்த பணியில் பலரையும் சந்தோஷப்படுத்துகின்றேன் என்பதை மிகவும் பெருமையாக உணர்கின்றேன்.

பெரும்பாலும் சமையல் கலைகளில் மலையகத்தவர்கள் சாதிப்பது மிகக் குறைவாக உள்ள நிலையில் நீங்கள் இந்த துறைக்கு வந்தது திட்டமிட்ட லட்சிய பயணமா அல்லது சந்தர்ப்ப சூழ்நிலையா?
அன்றைய நிலையில் இது எனது லட்சிய பயணமாக இருக்கவில்லை. நான் சாதாரண தரம் மட்டுமே கல்வி கற்றேன். அதன் பின்னர் எனக்கு நிலையான தொழில் ஒன்று தேவைப்பட்டது. அதன் காரணமாக நான் இந்த ஹோட்டல் துறையை தெரிவு செய்தேன்.

நீங்கள் வெளிநாட்டில் சமையல் கலையை தொழிலாக மேற்கொள்ளும் அதேவேளை இது தொடர்பில் மேலதிகமாக கற்று வருகிறீர்களா?

ஆம், இந்த ஹோட்டல் சார்ந்த சமையல் கலைக்கு முடிவு என்பது இல்லை. ஒவ்வொரு நாளும் புது புது உணவு வகைகளை தேடி ஆராய்ந்து அதனை எப்படி நாவுக்கு சுவையாகவும் மக்களை கவரும் வகையிலும் சமைத்து கொடுக்கலாம் என கற்றுக் கொண்டே இருப்போம். சாதாரணமாக  3 அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை வெளிநாடுகளில் இருந்து இந்த துறையில் அனுபவம் உள்ளவர்கள் வந்து எமக்கு கற்று கொடுப்பார்கள்.

 

இதுவரையில் எந்தெந்த நாட்டு சமையல்களை செய்ய கற்றுள்ளீர்கள்?
ஜப்பானிய உணவு வகைகள், சீன உணவு வகைகள், தென்னிந்திய உணவு வகைகள், வட இந்திய உணவு வகைகள், மேலைத்தேய உணவு வகைகள், பேஸ்ட்ரி மற்றும் பேக்கரி உணவு வகைகள் மற்றும் சைவ உணவுகள் என இன்னும் பல சமையல் சார்ந்த விடயங்களையும் கற்றுள்ளேன்.

நீங்கள் எந்த உணவுகளை சமைப்பதில் பிரசித்திப் பெற்றவர்?
சீனா மற்றும் ஜாப்பனிய உணவுகளை சுவைப்பட ரசித்து சமைப்பேன்

 

இலங்கையில் சமையல் கலை கற்பதற்கு பிரத்தியேகமாக கல்விசார் நிறுவனங்கள் உள்ளனவா ? அதில் படிப்பதற்கு அடிப்படை தகுதிகள் எவை?
 ஆமாம், இலங்கையில் அரச மற்றும் தனியார் கல்விசார் நிறுவனங்கள் உள்ளன.

இதில் கற்பதற்கு ஆர்வம் உடையவராகவும் சாதாரண தரம் வரை கற்றிருந்தால் போதுமானது.

வயது எல்லை 17 இருந்து.

இன்று இலங்கையின் தலைநகரில் இயங்கும் பெரும்பாலான உணவகங்களில் சமையல் காரர்களாக உள்ளவர்கள் எல்லோரும் மலையக இளைஞர்களாகவே உள்ளனர். ஆனால் இதனை முறைப்படி கற்று அங்கீகரிக்கப்பட்ட தொழில் முறையாக முன்னெடுப்பதில்லையே  அது ஏன்?
நம்மவர்கள் எதிலும் அக்கறை இல்லாதவர்கள். கொழும்புக்கு வேளைக்கு வந்தவுடன் 20 தொடக்கம் 50 ஆயிரம் வரையில் சம்பளம் எதிர்பார்ப்பார்கள்.

நம்மவர்கள் அழுக்கு படியாமல் வேலை செய்ய வேண்டும் என எண்ணுவதுடன். ஒன்று நகைக்கடை அல்லது புடவை கடையில் வேலை செய்வதையே விரும்புகின்றார்கள்.

எதிர்காலம் குறித்த சிந்தனை இல்லாமையே இதற்கு காரணம். அத்துடன் இவர்களை வழிநடத்த சரியான தலைமைத்துவம் இல்லாமையும் ஒரு காரணமாகும்.

ஏனைய துறைகளில் இருந்து சமையல் கலை எவ்வாறு வேறுபடுகிறது?
உலக துறை சார்ந்த தொழில்களில் சமையல் கலை சார்ந்த துறையிலேயே போட்டி அதிகம். காரணம் இந்த துறையில் நன்கு உழைக்கலாம்.

8 மணி நேர வேலை, மேலதிக கொடுப்பனவுகள், விடுமுறை, திறமையானவர்களுக்கு வெளிநாடுகளுக்கு பதவி உயர்வு என பல உயர்வுகள் உள்ளன. எனினும் மற்ற துறைகளை போல இங்கு போட்டி பொறாமைகள் இல்லை. திறமைக்கு மட்டுமே இடம்.

சமையல் கலையில் ஆர்வமுள்ளோர்க்கு அவர்கள் இந்த துறையில் அங்கீகாரம் பெற்ற நிலையில் உயர உங்கள் ஆலோசனைகள்…
எந்த துறையானாலும் ஆர்வத்துடன் அடிப்படையில் இருந்து கற்றுக்கொண்டால் நிச்சயம் அதில் சாதிக்கலாம். இலங்கையில் இருக்கும் இங்கு வந்திருக்கும் சமையல் கலைஞர்கள் அனைவருமே அடிமட்டத்தில் இருந்து வந்தவர்களே. அவர்களின் ஆர்வத்துடனான முயற்சி அவர்களை இன்று சாதிக்க வைத்துள்ளது.

இலங்கை சமையலுக்கும் சர்வதேச சமையலுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?
இலங்கை சமையலுக்கு உலகம் பூராகவும் வரவேற்பு உள்ளது. குறிப்பாக வீதியோர உணவுகளுக்கு இங்கு வரவேற்பு அதிகம். இயற்கையுடன் ஒன்றித்த தன்மை நம்முடையது.

சர்வதேச சமையல் அந்த நாடுகளை பின்பற்றி இருக்கும் குறிப்பாக தாய்,சூசி இனிப்பு என ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு வகை உணவுகள் உள்ளன.

இங்கெல்லாம் பொதி செய்யப்பட உணவுகளே அதிகம்.

சமையல் கலைஞர்களுக்கு வெளிநாடுகளில் இருக்கும் வரவேற்பு அல்லது தேவை எப்படி இருக்கிறது?
இலங்கை சமையல் கலைஞ்சர்களுக்கு உலகம் பூராகவும் நல்ல வரவேற்பு விமானம், சுற்றுலா தளங்கள், கப்பல், வெளி நாட்டு உணவகங்கள் என எங்கு பார்த்தாலும் நம்வர்கள்தான்.

சமையல் கலைத்துறை வருமானம் ஈட்டும் துறையாக உள்ளதா?ஆமாம், நிச்சயமாக. இங்கை இன்று சுற்றுலா துறையை நம்பி தானே இருக்கின்றது. உணவு உபசரிப்பு இலங்கைக்கு அதிக அந்நிய செலவாணியை பெற்றுத்தருகின்றது. சுற்றுலாத்துறை கூட ஒரு வகையில் சமையல் துறையை நம்பி தான் இயங்குகின்றது.

எதிர்காலத்தில் இலங்கையில் குறிப்பாக மலையகத்தில் சமையல் கலை தொடர்பான கற்பித்தல் விடயங்களில் ஈடுபடும் எண்ணம் உள்ளதா?
இல்லை, அதற்கான அனுபவம் குறைவு. மற்றவர்களுக்கு சரிவர கற்று கொடுப்பதானால் பட்டப்படிப்பு படிக்க வேண்டும்..

எதிர்காலத்தில் தனியான உணவகம் ஒன்றை இலங்கையில் ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளதா?
இதற்கு சரியான பதில் கொடுக்க முடியாது இன்றைய போட்டி நிறைந்த சூழலில் தனியாக ஒரு உணவகத்தை கொண்டு செல்ல முடியாது

பொருளாத நெருக்கடி வள பற்றாக்குறை போன்ற விடயங்கள் பற்றி சிந்திக்க வேண்டும்.

சமையல் கலையில் ஆர்வமாக உள்ள இளைஞர்களுக்கு உங்களால் ஆன வழிகாட்டல் செயல்பாடுகளை முன்னெடுக்கும் ஆர்வம் உள்ளதா அப்படி என்றால் உங்களை எப்படி தொடர்பு கொள்வது?
ஆமாம், விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். அப்படி முடியாதவர்கள் இணைய வழி மூலமாக என்னை தொடர்பு கொள்ள முடியும்.

நீங்கள் சமையல் கலை தவிர்ந்து மலையக அரசியலிலும் விமர்சகராக உள்ளீர்கள் மலையக அரசியல் நிலவரங்கள் தொடர்பில் உங்கள் எண்ணப்பாடு?
மலையக அரசியல் பற்றி நிறைய பேசலாம் அதற்கு நேரம் போதாது மலைகத்தில் மாற்றம் வேண்டும் என்றால் முதலில் நம் அடிப்படை மாற வேண்டும். அதற்கு சிறந்த ஆயுதம் கல்வி மட்டுமே.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு விடிவுக்கலாம் இல்லை. 1000 சம்பளம் பெற்றுகொடுக்க கூட தகுதி இல்லாதவர்கள். இனிவரும் காலங்களிலாவது படித்தவர்கள் பாரளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் அதுவும் மலையகத்தில் உள்ளவர்கள் . எங்கள் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரைக்கும் தொடர்ந்து குரல் கொடுப்போம்.

நீங்கள் உழைக்கும் பணத்தில் பாதி தொகையை மாதம் மாதம் ஏழை எளியோர்களுக்கும் உதவிகள் தேவைப்படுவோர்க்கும் வழங்கி வருகிறீர்கள் இந்த எண்ணம் எங்கிருந்து அல்லது எதை நோக்கியது?ஒரு காலத்தில் எங்களுக்கு இல்லாத போது நிறைய முகம் தெரியாதவர்கள் உதவி இருக்கின்றார்கள். நாங்கள் பிறக்கும் போது ஒன்றும் கொண்டு வர வில்லை இறந்த பின்பும் கொண்டு செல்வது இல்லை. வாழும் வரை சந்தோசமாக இருப்போம் இல்லாத்தவர்களுக்கு கொடுத்து உதவுவோம்.

கடவுளுக்கு கொடுப்பதை ஏழை மக்களுக்கு கொடுத்தால் அதுவே புன்னியமாகும் என்பத எனது கொள்கை..

சமையல் கலையில் உங்கள் முன்னோடி?
வீரசிங்க என்ற சகோதர மொழி பேசும் ஒரு நண்பரே எனக்கு சமையல் கலை சார்ந்த விடயங்களை கற்று தந்தார்.

உங்கள் வாழ்வில் நீங்கள் யாருக்கேனும் நன்றி சொல்ல விரும்பினால் …
பாடசாலையில் தரம் 1 தொடக்கம் தரம் 4 வரை படித்த போது உதவி புரிந்த

ஆசிரியர் ராஜசேகரன் மற்றும் தற்போது அவுஸ்ரேலியாவில் இருக்கும் ஆசிரியர் மெட்டிலடா இவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

இத்தனை வருட கால வாழ்வியல் அனுபவத்தில் இந்த உலகத்திற்கு எதோ ஒன்றை சொல்ல விரும்புவீர்கள் என்றால் என்ன சொல்லுவீர்கள்?
நான் சாதாரண தரம் மட்டுமே கல்வி கற்றவன் அதிலும் பெரிய பெறுபேறுகள் இல்லை . எனினும் படிக்க வில்லை என கவலை படவில்லை. எனது முயற்சி மற்றும் நம்பிக்கையின் காரணமாக இன்று வெளிநாட்டில் 50 பேருக்கு தலைமை சமையல்காரராக இருக்கின்றேன். இவை எல்லாம் யாரும் சும்மா தூக்கி கொடுத்ததல்ல கடுமையாக உழைப்பும் அனுபவமும் பெற்றுத் தந்தவை.

படித்தால் மட்டும்தான் நல்ல வேலை கிடைக்கும் என்றில்லை முயற்சி இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.

ஹோட்டல் துறை சமையல் காரன் என்று யாரும் கேவலமாக நினைக்க வேண்டாம் இதுவும் ஒரு சேவை தான்.  முயற்சி செய்ய வெற்றி கொள்

மனிதன் உண்ணுவதை நிறுத்தும் வரை
அழிவு என்பது எங்கள் கலைக்கு ஏது!

நேர்காணல்: ப. கணகேஸ்வரன் (கேஜி)

You must be logged in to post a comment Login