Cinema

நயன்தாரா உடன் எப்போது திருமணம்? – விக்னேஷ் சிவன் பதில்

By  | 

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலிப்பது ஊரறிந்த விஷயம். இருவரும் வெளிப்படையாக அதை கூறியதில்லை. ஆனால் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் திருமணம் பற்றி அவ்வப்போது செய்திகள் வரும். இந்நிலையில் ஒரு பேட்டியில் தங்களது திருமணம் குறித்து விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :
எங்களுக்கு என்று வாழ்வில் சில திட்டங்கள், கனவுகள், நோக்கங்கள் உள்ளன. அதையெல்லாம் முடித்த பின்பே திருமணம் பற்றி யோசிப்போம். இப்போதைக்கு நாங்கள் எங்கள் வேலையில் தான் முழு கவனம் செலுத்துகிறோம். இணையதளங்களில் மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது எங்களுக்கு திருமணம் பண்ணி வைத்துவிடுவார்கள். அப்படி இதுவரை 22 முறை திருமணம் நடந்துவிட்டது என்றவர், கிண்டலாக எங்களுக்கு எப்போது லவ் போர் அடிக்கிறதோ அப்போது திருமணம் செய்வோம் என்கிறார்.

You must be logged in to post a comment Login