Children

நவீன செயலி!

By  | 

குழந்தைகள் வீட்டில் தூங்குவதை விட, கார் பயணங்களில் இயல்பாகவே உறங்கிவிடும். இந்த வழக்கத்தை வைத்து குழந்தைகளுக்கென நவீன படுக்கை ஒன்றை கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு உருவாக்கியுள்ளது. வீட்டில் எந்தவித தொந்தரவுமின்றி குழந்தைகள் உறங்க இது உதவுகிறது.

மேக்ஸ் மோட்டார் ட்ரீம்ஸ் க்ரிப் என்ற பெயரில் அந்நிறுவனம் தயாரித்துள்ள குழந்தைகளுக்கான இந்தத் தொட்டிலில் பல தொழில்நுட்பங்களும் இடம்பெற்றுள்ளன.

தெருவிளக்குகள் போன்ற உணர்வை ஏற்படுத்தும் எல்.இ.டி விளக்குகள் இந்த நவீனத் தொட்டிலில் உள்ளன. குழந்தை எது போன்ற பயணத்தில் உறக்கத்தை எட்டும் என்பதை பெற்றோர்கள் அறிந்துகொள்ளும் வகையில் செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment Login