Cinema

நான் ஆண்களால் ஆசீர்வதிக்கப்பட்டவள்

By  | 

-ஆஷிமா நர்வால்

கொலைகாரன் படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக நடித்தவர் ஆஷிமா நர்வால். தற்போது ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார். பெண்ணுக்கு பெண் துணை என்ற ஹேஸ்டேக்குடன் டிரண்டாகி இருக்கும் கருப்பு வெள்ளை படங்கள் வெளியீட்டில் ஆஷிமாவும் பங்கேற்றிருக்கிறார்.

தனது போட்டோவை வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது:
நேர்மறை நோக்கத்துடன் நல்ல செயல்கள் செய்பவர்கள், நேர்மையாக இருப்பவர்கள், பிறருக்குத் தீங்கு செய்யாதவர்கள், நிஜ வாழ்க்கையில் நடிக்காதவர்கள் என்றிருக்கும் அனைவரையும் ஆண், பெண் என பாகுபாடு பார்க்காமல் நான் ஆதரிக்கிறேன். பெண் பெண்ணுக்கு ஆதரவு காட்டுகிறாளா அல்லது ஆண் ஆணுக்கு ஆதரவு காட்டுகிறானா என்பதல்ல விஷயம். நல்லவர்களுக்கு நல்லவர்கள் ஆதரவு காட்ட வேண்டும் என்பதே முக்கியம்.

பல ஆண்கள் எனக்கு ஆதரவு காட்டியதால் தான் ஆசிர்வாதமான வாழ்க்கை எனக்கு அமைந்தது. எந்த பாலினத்தவர் என்றாலும், அவரது நோக்கம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். எனது பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும் ஆண், பெண் அனைவருக்கும் இந்த கறுப்பு வெள்ளைப் படத்தை சமர்ப்பிக்கிறேன் என்கிறார் ஆஷிமா.

You must be logged in to post a comment Login