General

நாம் ஒன்று நினைத்தால்…. அவர்கள்…!

By  | 

காலணியை கழற்றக்கூடாது

நாம் வீட்டுக்குள் நுழையும் முன், ஷூ_, செருப்புகளை வாசலிலேயே கழற்றி வைத்துவிட்டு நுழைவோம். ஆனால், இப்படி தாய்லாந்தில் செய்தால், அது அந்த வீட்டில் உள்ள மனிதர்களை அவமானப்படுத்துவதற்கு சமம். ஸ்பெயின் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் காலணி அணிந்துகொண்டு செல்லலாம்!

 

கார்ட் கையில் இருக்கட்டும்!

இரு ஜப்பானிய வியாபாரிகள் சந்தித்துக்கொண்டால், முதலில் பகிர்ந்துகொள்வது பரஸ்பர விசிட்டிங் கார்டைத்தான். கார்டை கொடுத்ததும் மற்றவர் அதனை உடனே பொக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டுவிடக்கூடாது. கையில் வைத்துக் கொண்டு பேசவேண்டும். இறுதியில் அணிந்திருக்கும் ஜக்கெட் பையில் போட்டுக் கொள்ளவேண்டும். மாறாக, பேன்ட் பொக்கெட்டில் போட்டுக்கொண்டால், எதிராளியை அவமானப்படுத்துவதாக அர்த்தம். இந்த வழக்கம் சீன வியாபாரிகளிடையேயும் பொருந்தும்.

 

பெண்ணை எடை போடாதே

ஆஸ்திரிய நாட்டு ஆண்கள், தங்கள் நாட்டுப் பெண்களைப் பார்த்து ‘You are really looking great’ என அவர்கள் மொழியில் கூறமுடியாது. இதற்கு அந்நாட்டு மொழியின் அர்த்தமே வேறு… அந்தப் பெண்ணின் வெயிட்டை எடை போட்டுப் பார்த்ததாகக் கருதுவர்.

 

டேஞ்சர் ரோஜா

மெக்சிகோ மக்கள் ஒரு பெண்ணுக்கு மறந்தும், சிவப்பு ரோஜாவைத் தரமாட்டார்கள். ஏன் தெரியுமா? அந்த நாட்டில் சிவப்பு ரோஜாவை சமாதியில் வைக்க மட்டுமே பயன்படுத்துவார்கள்.

 

‘தருகிறேன்…’ ‘வேண்டாம்!’

அரபு நாட்டினர், தாங்கள் செல்லும் வீட்டில் உள்ள தளபாடங்களைப் பாராட்டுவதைத் தவிர்ப்பார்கள். காரணம், அப்படி பாராட்டினால் வீட்டுக்காரர், அந்த பர்னீச்சரை வந்தவருக்கு வாங்கித் தரவேண்டும். அதேசமயம், வீட்டுக்காரர் ஒரு விலையுயர்ந்த நகையைக் காட்டி, ‘தருகிறேன்’ எனக் கூறினால், உடனே அதனை வாங்கிக்கொள்ளக்கூடாது. மாறாக, ‘வேண்டாம்’ என மறுத்துவிடவேண்டும்.

 

பேசும்போது தூங்கலாம்

ஜப்பானில் பேசிக்கொண்டிருக்கும்போது, கேட்கும் நபர் தூங்கிவிட்டால் அதனைப் பற்றி பேசுபவர் கவலைப்படமாட்டார். மாறாக தூங்கும் நபர் கூர்ந்து கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறார் என எடுத்துக்கொள்வார்களாம். அது மட்டுமல்ல, ஒரு நிறுவன மீட்டிங் நடக்கிறது… அங்கே பேசுபவரின் பேச்சை தலைவர் கேட்காமல் தூங்கிக்கொண்டிருந்தால், அதனையும் தப்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மாறாக, பேசுபவர்கள் மீது முழு நம்பிக்கை. அதனால்தான் தூங்குகிறார் என எடுத்துக்கொள்ள வேண்டுமாம்.

 

மூக்கு சிந்தினால் தவறா?

சீனர்களுக்கு பொது இடத்தில் துப்புவதும் ஏப்பம் விடுவதும் சகஜம். ஆனால், மூக்கைச் சிந்தினால் தவறாக எடுத்துக்கொள்வார்கள். ஒன்று சப்தமில்லாமல் செய்யவேண்டும் அல்லது கழிவறை சென்று சிந்திவிட்டு வரவேண்டும்.

 

கட்டை விரலை காட்டித் ‘தொலை’யாதே

இங்கே இரு சக்கர வாகனங்கள் செல்லும்போது, அதில் ‘லிப்ட்’ கேட்க சிலர் தங்களுடைய கட்டை விரலை உயர்த்திக் காட்டுவது உண்டு. ஆனால், அவுஸ்திரேலியாவில் இப்படிக் காட்டினால், ‘தொலைந்து போ’ என அர்த்தம். மீறி காட்டினால், இரு சக்கர வாகனத்தில் சென்றவர் திரும்ப வந்து, உங்களை ஓங்கி ஒரு அறை விடுவார்.

 

தனித்தனி பில் கிடையாது

பிரான்சில் உணவகத்தில் சாப்பிட்டு முடித்து நண்பர்கள் தனித்தனி பில் கேட்டால் தரமாட்டார்கள். மாறாக ஒவ்வொரு நபரும் மொத்த பில் தொகையில் இருக்கும் நபர்களிடையே பகிர்ந்து, தனித்தனியாக கொடுக்கலாம்.

 

விசிலடித்தால் ஏழையாகிவிடுவர்

ரஷ்யாவில் விசில் அடிப்பது பற்றி சில நம்பிக்கைகள் உண்டு. ஏதாவது பாட்டை விசில் அடித்து இசைத்தால் ஏழையாகிவிடுவார்கள் என்று நம்புகிறார்கள். அதுமட்டுமல்ல விசிலை, பேய்க்காற்றுடன் இணைத்துப் பேசுவார்கள். விசில் அடித்தால், நம்மிடம் உள்ள பணமெல்லாம் பறந்துபோய்விடும் எனவும் நம்புகிறார்கள்.

You must be logged in to post a comment Login