Poetries

நிலவு…!

By  | 

நிலவைப் பார்த்து

இரசித்திடுவோம்!

நிறையவே பாடம்

படித்திடுவோம்!

 

வளர்பிறையாய்

வளர்ந்திடுவோம்!

பௌர்ணமியாய் உச்சம்

தொட்டிடுவோம்!

 

தேய்பிறையாய் வறுமையை

ஒழித்திடுவோம்!

அமாவாசையாய் இடரை

அழித்திடுவோம்!

 

தாரகை நடுவில்

தண்மதியாய் என்றும்

“தனித்துவத்தோடு”

விளங்கிடுவோம்!

 

இருண்ட வானில்

பாலொளியாகும்

இரம்மிய நிலவாய்

இலங்கிடுவோம்!

 

துயிலும் உலகை

வருடிடும் நிலவாய்

துவல்வோரை விரைந்து

தாங்கிடுவோம்!

 

அல்லி மலர்ந்திட

உதித்திடும் நிலவாய்

அடுத்தவர் மகிழ்ந்திட

வாழ்ந்திடுவோம்!

 

பௌர்ணமியின் பின்

முடங்கிடும் நிலவாகாமல்

நிறைவிலும் முயற்சியைத்

தொடர்ந்திடுவோம்!

 

எட்டா உயரத்தில்

பவனி  வந்தாலும்

‘மறு’வால் நிலவின்

ஒளி மாழ்கிடுமே!

 

எட்டுத் திக்கையும்

வென்று வந்தாலும்

ஒழுக்கம் இழந்தால் நம்

மதிப்பும் கவிழ்ந்திடுமே!

-சுமைரா  அன்வர்.
மல்லவப்பிட்டி

 

You must be logged in to post a comment Login