Antharangam

நீரில் பூக்குமா புது உறவு?

By  | 

கேள்வி:

நீருக்குள் உடலுறவு கொண்டால் கர்ப்பம் தரிக்க முடியுமா?

 

பதில்:

சாதாரண நிலையிலேயே இருவரது ஒத்திசைவும் பூரணமாகவும் வேகமுள்ளதாகவும் இருக்கவேண்டிய நிலையில் நீருக்குள் அந்த வேகத்தைக் கொண்டுவருவது சிரமம். மிதக்கும் நிலையில் இருப்பீர்கள் என்பதால் பிடிமானம் குறைவாக இருக்கும். பிடிமானம் குறைவாக இருப்பதால் உங்களுக்கு உந்து சக்திக்கு ஆதாரம் எதுவும் கிடைக்காது.

நீங்கள் நீரில் இருக்கும்போது உங்கள் உடல் குளிர்ச்சியடைந்திருக்கும் என்பதால் நீண்ட நேரம் நீங்கள் உறவில் ஈடுபட்டுத்தான் அதை முடிக்க முடியும். மேலும் நீச்சல் தடாகம் என்பன இல்லாமல் நீரோடும் நிலையில் அதாவது நதி, கடல் போன்ற பகுதிகளில் நீரின் போக்கை எதிர்த்தே நீங்கள் இயங்கவேண்டியிருக்கும். இதனால் வழக்கத்திலும் பார்க்க அதிக உழைப்பு உங்கள் உடலுக்குத் தேவைப்படும். இந்த இரண்டும் சேர்ந்து உங்களை களைப்படையச் செய்துவிடுவதால் நீர்நிலைகளில் இருந்தவாறு உறவு கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டி வரும்.

மேலும் குளிர்ச்சியான நிலையில் உயிரணுக்களின் நீந்தும் வேகம் குறைவாக இருப்பதால் பெண்ணின் கருமுட்டையைச் சென்றடைவதிலும் தடைகளுக்கு முகங்கொடுக்க நேரும்.

அதேநேரம், நீரில் இருந்தபடி குழந்தையைப் பிரசவிப்பது தாய்க்கும் சேய்க்கும் நன்மை பயக்கக்கூடியது.

 

You must be logged in to post a comment Login