
Women Achievers
நெப்கின்களை இலவசமாக வழங்க ஸ்கொட்லாந்து முடிவு!
பெண்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக சானிட்டரி நெப்கின்களை இலவசமாக வழங்க ஸ்கொட்லாந்து அரசு முடிவுசெய்துள்ளது.
ஸ்கொட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.எஸ்.பி) மோனிகா லெனான் பெண்களுக்காக சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சானிட்டரி நெப்கின் உள்ளிட்ட சுகாதாரப் பொருள்களை இலவசமாக வழங்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை விவாதிக்கப்பட்ட இந்த மசோதா 121 வாக்குகளுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் சானிட்டரி நெப்கின்களை இலவசமாக வழங்கும் முதல் நாடாக ஸ்கொட்லாந்து மாறியுள்ளது.
மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் ஸ்கொட்லாந்து முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுகாதாரப் பொருள்கள் இலவசமாகக் கிடைக்கும்.
Because periods don’t stop in a pandemic, we didn’t give up. The final vote on the Period Products (Free Provision) (Scotland) Bill is on Tuesday. 💪🩸#freeperiodproducts
Thank you to every single person who has made this possible. ❤️
Latest news 👉https://t.co/jEmCiyjLe1 pic.twitter.com/fe5TFYrsOP
— Monica Lennon (@MonicaLennon7) November 22, 2020
You must be logged in to post a comment Login