Antharangam

பசித்தால் மட்டுமே சாப்பிடுங்கள்!

By  | 

கேள்வி:
எனக்கு வயது 26. இப்போதுதான் திருமணப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர். நாள் அவ்வப்போது சுய இன்பத்தில் ஈடுபடுகிறேன். இதனால் ஏதாவது உபாதைகள் ஏற்படுமா? ஆண்மையை அதிகரிக்க வழிகள் சொல்வீர்களா?

பதில்:
ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் சுய இன்பத்தின்பால் பல குழப்பங்களுடனேயே வாழ்கிறார்கள். உங்கள் கேள்வியும் இதையே உறுதிப்படுத்துகிறது.
இதுபற்றிப் பல தடவைகள் விளக்கங்கள் அளித்திருக்கிறோம். என்றபோதும், அவற்றை நீங்கள் வாசித்திருக்க மாட்டீர்கள் என்பதே எமது நம்பிக்கை அதன் பேரில், உங்களுக்கான விளக்கங்கள் இதோ…
சுய இன்பம் என்பது, இருபாலருக்கும் இயற்கையாய் அமைந்த நியதி. இந்த நியதியை யாருமே மீற முடியாது. முக்கியமாக, திருமணமாகாதவர்கள் சுய இன்பத்தின் மூலமே தமது இச்சைகளுக்கு வடிகால் அமைத்துக்கொள்கின்றார்கள். இது தவறல்ல!
ஆனால், எந்தவொரு விடயத்திற்கும் ஒரு எல்லை இருக்கிறது. சுய இன்பத்திற்கும் இருக்கிறது. இதில் வினோதமான அம்சம் என்னவென்றால், இந்த எல்லை, ஒருவருக்கொருவர் வேறுபடும் என்பதே.
இந்த வேறுபாட்டுக்குக் காரணங்கள் இருக்கின்றன. ஒருவரது வயது, உடல் வலு, உண்ணும் உணவு, மனப் பாதிப்புகள், சூழல் என்பனவே இந்த வேறுபாட்டை நிர்ணயிக்கின்றன. எனவே, ஒரு கிழமைக்கு இத்தனை தடவை என, சுய இன்பத்தை பொதுவாக அறுதி செய்ய முடியாது.
பொதுவாக, பதின்பருவத்தை எட்டும்போது, பாலுணர்வு தலைதூக்குகிறது. இந்தப் பதின்பருவம் நிறைவுறும் தறுவாயில் சுய இன்பத்தின்பாலான சுய கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கின்றனர். குறித்த வயதுக்கு மேலும் திருமணமாகாமல் இருப்பவர்கள், தனிமை, ஏக்கம் என்பவற்றால் மீண்டும் கட்டுப்பாடுகளை உடைத்தெறிகிறார்கள். ஆனால், இதனால் நீங்கள் பயப்படும்படியான விளைவுகள் எதுவும் ஏற்படப்போவதில்லை. சுய இன்பம் காண்பதால் திருமண வாழ்க்கையில் பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்பில்லை. இவையனைத்தும், சில மாற்று மருத்துவர்கள் கூறும் தவறான தகவல்களால் ஏற்படும் சந்தேகங்கள்தான்.
அடுத்து, இறைபக்திக்கும் லௌகீக சுகங்களுக்கும் தொடர்பில்லை. எந்தவொரு சமயமும் – முக்கியமாக இந்து சமயம் – இளம் வயதில் துறவறத்தைப் போதிக்கவில்லை. அந்தந்த வயதுக்கேற்ற வாழ்க்கையையே நெறிப்படுத்திக் கொடுக்கின்றன. ஆனால், கடவுள் பால் லயிக்கும் அதே மனம், உடல் இச்சையின்பாலும் லயிப்பது உங்களுக்கு ஒரு புதிராக இருக்கிறது. அதுதான் உங்கள் குழப்பத்திற்கும் காரணம். எனவே, இந்தக் குழப்பம் தேவையற்றது.
ஆண்மையை அதிகரிப்பதற்கு, உடல், உள ஆரோக்கியம் அவசியம். குளிர்மையான உணவுகளையும், பாதாம், பிஸ்தா, பேரீச்சம்பழம் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உப உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். உறவில் ஈடுபடுவதற்கு முன்னதாக, மனம் புத்துணர்ச்சியுடன் விளங்க வேண்டும். சிலர், உறவுக்கு முன் சில ஆபாசப் படங்களையும், சலனப் படங்களையும் பார்ப்பதுண்டு. இவை, உறவில் பாதிப்பையே விளைவிக்கும். இயற்கையாகவே உறவின்பால் நாட்டம் எழும்போதே அதை அனுபவிக்கப் பழகுங்கள். உறவு திருப்தியுறும்.
பசித்தால் மட்டுமே சாப்பிடப் பழகிக்கொள்ளுங்கள்.

You must be logged in to post a comment Login