Home Garden

படுக்கை அறையில் வைக்க வேண்டிய செடிகள்

By  | 

நீங்கள் தூங்கும் அறையில், சிலவகை செடிகளை வைப்பதன் மூலம் உங்களுக்கு ஆழ்ந்த நித்திரை கிடைக்கும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 செடிகளை நீங்கள் தூங்கும் அறையில் வையுங்கள்.

மல்லிகை(Jasmine)
மல்லிகை இயற்கையாக உறக்கத்தை ஏற்படுத்த உதவும் என ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தரமான தூக்கம், குறையும் பதற்றம் மற்றும் விழிக்கும்போது மேம்பட்ட மனநிலை போன்ற நேர்மறையான தாக்கங்களை இது ஏற்படுத்துகிறது.மேலும் இதன் வாசனையும் கூட அற்புதமாக இருக்கும்.

லாவெண்டர் (Lavender)
தூக்கமின்மை மற்றும் பதற்றம் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தவும் கூட லாவெண்டர் செடி உதவுகிறது.

இந்த வாசனையை நுகரும் போது இதமாக இருக்கும் என்றும், இதன் வாசனையை சுவாசிக்கும்போது நரம்புகளுக்கு அமைதியூட்டும் மருந்தாகவும் அமையும் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கார்டானியா(Gardenia)
கேப் மல்லிகை என அழைக்கப்படும் கார்டானியா ஜாஸ்மினாய்ட்ஸ் தூக்கத்தை தூண்டும் வல்லமையை கொண்டுள்ளதால் இவற்றை தூக்க மாத்திரைகளாக பரிந்துரைக்கின்றனர்.

எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனையில், காபா என்றொரு நரம்பணு மீதான வேலியத்தின் அதே தாக்கங்களை இந்த மலர்கள் கொண்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

மிக தூய்மையான வாசனையுடன் கூண்டில் வைக்கப்பட்ட அந்த எலிகள் அதிக முனைப்புடன் இல்லாமல், ஒரு மூலையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. இதே விளைவுகளை மனிதர்களின் மீதும் இது ஏற்படுத்துகிறது.

பாம்பு தாவரம்(SnakePlant)

வீட்டிலுள்ள ஆக்சிஜென் தூய்மையை மேம்படுத்த சிறந்த வழியாக பரிந்துரைக்கப்படுகிறது.

படுக்கை அறையில் இதனை வைப்பதற்கு குறைந்த பராமரிப்பும் குறைந்த செலவே ஆகிறது.

நாசா நடத்தியஆய்வில் காற்றை சுத்தப்படுத்தும் 12 தாவரங்களில் இதையும் ஒன்றாக இணைத்துள்ளது.

கற்றாழை(Aloe Vera)


கற்றாழை உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்கும். அது மட்டுமல்லாது சுத்தப்படுத்தும் பொருட்களில் உள்ள மாசுப்படுத்தும் ரசாயனங்களை இது நீக்கும்.

அதனால் படுக்கையறை மற்றும் வீட்டின் பிறபகுதிகளில் காற்றை தூய்மைப்படுத்தும். உங்கள் வீட்டில் தீமையான ரசாயனங்கள் அதிகளவில் இருந்தால் இந்த செடியில் பழுப்புநிற திட்டுக்களை காணலாம். மேலும் இது உங்களுக்கு நிலைமையை தெளிவாக்கும்.

You must be logged in to post a comment Login