Cookery

பனீர் கட்லட்

By  | 

தேவையான பொருட்கள்:

பனீர் – 100 கிராம்

உருளைக்கிழங்கு – 1 கப் (மசித்தது)

பொட்டுக்கடலை – 50 கிராம் (பொடித்து வைத்தது)

முட்டை – 1

வெங்காயம் – 2

கொத்தமல்லி – சிறிதளவு

பச்சை மிளகாய் – 2

சிக்கன் 65 பொடி – 1 ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

இஞ்சி, வெ.பூண்டு விழுது – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பட்டர் – தேவையான அளவு

செய்முறை:

  • கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் பட்டர் தவிர்த்து அனைத்தையும் சேர்த்து கலந்துகொள்ளவு;ம.
  • பனீர், முட்டையில் உள்ள ஈரப்பதமே போதுமானது. தேவைப்பட்டால் மட்டும் நீர் தெளித்து கடலைவடை மா பக்குவத்தில் பிணைந்து வைக்கவும்.
  • அரைமணி நேரம் ஊறிய பின் சிறு உருண்டை எடுத்து வட்டமாக தட்டி தவாவில் பட்டர் விட்டுப் பொரித்து எடுக்கவும்.

You must be logged in to post a comment Login