Cookery

பன்னீர் பாயாசம்

By  | 

தேவையான பொருள்கள்:
பால் – 1 லிட்டர்
பன்னீர் – 1 கப்
அரிசி மா – 1 ஸ்பூன்
ஏலக்காய் – 6
சர்க்கரை – 1/4 கப்
உலர்ந்த திராட்சை – தேவையான அளவு
குங்குமப்பூ – தேவையான அளவு
பாதாம் – 5
பிஸ்தா – 5

செய்முறை:
• பன்னீரை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
• பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் பால் மற்றும் அரிசி மாவை சேர்த்து நன்றாக 10 நிமிடம் கிளற வேண்டும்.
• கிளறும் பொழுது கட்டிகள் வராதவாறு பார்த்து கொள்ள வேண்டும். 10 நிமிடம் கழித்த பிறகு பால் கெட்டி ஆகி விடும்.
• பிறகு அதில் உலர்ந்த திராட்சை பழங்கள், ஏலக்காய், குங்குமப்பூ, தேவையான அளவு சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
• நன்றாக கெட்டி பதத்தில் வந்த பிறகு அதில் நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்த்து ஒரு 3 நிமிடம் மிதமான தீயில் கிளறி விடவும்..
• அடுத்து அடுப்பை அனைத்து பாயசத்தை ஒரு பௌலில் மாற்றி பாதாம், பிஸ்தா குங்கும பூ ஆகியவை கொண்டு அலங்கரித்தால் பன்னீர் பாயசம் தயார்.

You must be logged in to post a comment Login