Cinema

பாகுபலியை மறந்தாரா பிரபாஸ்?

By  | 

சினிமா பிரபலங்களின் சமூக வலைத்தள கணக்குகள் மீது ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு பார்வை உண்டு. ஒவ்வொரு நாளும் தங்கள் அபிமான நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் எதையாவது பதிவிட மாட்டார்களா என காத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களை வைத்து படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களிடம் கூட அப்டேட் கொடுங்கள் என கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் யாரைப் பின்தொடர்கிறார்கள் என்பதைக் கூட கவனிப்பார்கள்.


சமீபத்தில் நடிகர் பிரபாஸ், புதிதாக தீபிகா படுகோனேவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர ஆரம்பித்துள்ளது கூட ஒரு செய்தியாகிவிட்டது. பிரபாஸின் 21வது படத்தில் அவரது ஜோடியாக தீபிகா படுகோனே தான் நடிக்கிறார். அவரோடு சேர்த்து தற்போது நடித்து வரும் ராதே ஷ்யாம் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே, முன்னாள் ஹிந்தி ஹீரோயின் பாக்யஸ்ரீ, சாஹோ படத்தின் இயக்குனர் சுஜித், நாயகி ஷ்ரத்தா கபூர் என ஐந்தே ஐந்து பேரை மட்டுமே பிரபாஸ் பின் தொடர்கிறார்.
அதே சமயம் பிரபாஸை இந்திய அளவில், உலக அளவில் புகழடைய வைத்த ராஜமௌலி, உடன் நடித்த ராணா டகுபட்டி, அனுஷ்கா, தமன்னா ஆகியோரை பிரபாஸ் பின்தொடரவில்லை. தனக்கு திருப்புமுனையைத் தந்த பாகுபலி குழுவினரை பிரபாஸ் பின்தொடராததன் காரணம் என்னவோ?

You must be logged in to post a comment Login