Cookery

பால்கோவா

By  | 

தேவையான பொருட்கள் :

பால் – ஒரு லீட்டர்

சீனி – 200 கிராம்

ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை

நெய் – 3 தேக்கரண்டி

செய்முறை:

அகலமான பெரிய நாண்ஸ்டிக் பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து, பால் மூன்றில் ஒரு பங்காக வற்றும்வரை நன்றாகக் காய்ச்சவும். (ஒரு மரக் கரண்டியால் பாத்திரத்தின் ஓரங்களில் படியும் பாலாடையை வழித்து பாலில் சேர்த்துவிட்டு, அடிக்கடி கிளறிக்கொண்டே இருக்கவும். பால் நன்றாக வற்றுவதற்கு 30 -40 நிமிடங்கள் ஆகக்கூடும்)

பால் நன்கு வற்றியவுடன் சீனியைச் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும். சீனி கரைந்து பால் கெட்டியானதும் நிறம் மாறிவரும்.

பால்கோவா வாசனை நன்றாக வரும்போது நெய் சேர்த்துக் கிளறி, பிறகு ஏலக்காய்ப் பொடியைச் சேர்த்துக் கிளறவும்.

நன்கு கெட்டியாகி பால்கோவா பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

You must be logged in to post a comment Login