Articles

பெண்கள்… எண்கள்…!

By  | 

பிரசவம் அல்லது குழந்தைப்பேறு நடக்கும் சமயத்தில் ஒவ்வொரு 90 நொடியிலும் ஒரு பெண் இறக்கிறாள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் உண்மை.

சுமாராக ஒரு நாளுக்கு ஒரு பெண் 20,000 வார்த்தைகள் பேசுகிறாள். இது ஆண்களை விட 7,000 வார்த்தைகள் அதிகமாகும். ஓர் ஆண் சுமாராக ஒரு நாளுக்கு 13,000 வார்த்தைகள் பேசுகிறான்.

பண்டைய ரோம் நாட்டில் கிளாடியேட்டர்களின் வியர்வையை பெண்கள் தங்களது அழகை பராமரிக்க பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

சராசரியாக பெண்கள், தங்களது வாழ்நாளில் ஒரு வருடத்தை, என்ன துணி அணியலாம் என்ற சிந்தனையிலும், துணியை தேர்ந்தெடுப்பதிலும் செலவழிக்கின்றனர்.

ஒரு பெண் ஒரு வருடத்தில் சராசரியாக 30-64 முறை அழுகிறாள். ஓர் ஆண், சராசரியாக ஒரு வருடத்துக்கு 6-17 முறை அழுகிறான்.

ஆண்களை விட இரு மடங்கு அதிகமாக பொய் கூறும் திறன் கொண்டவர்கள் பெண்கள்.

ஆண்களின் இதயத்துடிப்பை விட பெண்களின் இதயம் வேகமாக துடிக்கிறது. இது பெரும்பாலும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

பெண்களின் வாழ்நாளில் ஏறத்தாழ நான்கு வருடங்கள் மாதவிடாயில் கழிகிறது.

ஆண்களை விட ருசி உணர்வு அதிகம் கொண்டவர்கள் பெண்கள். ஏனெனில், ஆண்களை விட அதிகமான ருசி உணர்வு மொட்டுகள் பெண்களின் நாக்கில் இருக்கின்றன.

உடலுறவில் ஈடுபட்ட ஐந்து அல்லது எட்டு நாட்களில் பெண்கள் கருத்தரிக்கின்றனர்.

ஒரு பெண் சராசரியாக ஒரு நாளுக்கு 4 – 9 முறை தங்களது தோற்றத்தைப் பற்றி எண்ணுகிறார்கள்.

பெண்களை கொல்லும் கொடிய நோயாக இருப்பது இதய பிரச்சினைகள் தான். உலகெங்கிலும் பெண்கள் அதிகமாக மரணமடைய இதய கோளாறுகள்தான் காரணமாக இருக்கிறது.

மல்டி டாஸ்கிங் திறனில் ஆண்களை விட திறன் வாய்ந்தவர்கள் பெண்கள்.

100இல் 2 பெண்கள் தங்களது அழகை பற்றியும், தாங்கள் தான் அழகு என்றும் சுய புராணம் பாடிக்கொள்கிறார்கள்.

You must be logged in to post a comment Login