Articles

பெயருக்கு தண்டனை!

By  | 

மனிதனை தனித்து அடையாளப்படுத்துவது பெயர்கள் தான். சில பெயர்களை சூட்டினால், சில நாடுகளில் தண்டனை உண்டு. என்னப்பா புது வம்பு என்கிறீர்களா…? இதில் உள்ள சுவாரஸ்யத்தை பார்ப்போம்…

மேசியா:

அமெரிக்காவில் 7 வயது சிறுவனுக்கு இந்த பெயரை சூட்டினர், பெற்றோர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அந்த பெயரை சூட்டக்கூடாது என சிறுவனின் பெற்றோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் 2013இல் வழக்கு தொடரப்பட்டது.

மெசியா என்பது ‘மீட்பர்’ என்ற பொருளில் கடவுளைக் குறிக்கும். அந்த பெயர் சில மதங்களில் பொதுவாக உள்ளது. எனவே, யாருக்கும் சூட்டமுடியாது என நீதிமன்றம் தடை விதித்தது. ஒரு சார்பினர், ‘விடுதலை அளிப்பவர்’ என்ற பொருளில் இந்த பெயரை வழங்குகின்றனர்.

Adolf Hitler

ஹிட்லர்:

ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர். இவரது பெயரை சூட்ட ஜெர்மன் மற்றும் ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், 1943இல் தடை விதிக்கப்பட்டிருந்தது. மீறினால் தண்டனை வழங்கப்பட்டது.

அகுமா:

கிழக்காசிய நாடான ஜப்பானில் ஒரு தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு, அகுமா என பெயர் சூட்டினர். இதை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அறிவித்தனர். உடனடியாக அவர்கள் மீது வழக்கு பாய்ந்தது. ஜப்பான் நீதிமன்றத்தில், இந்த பெயருக்கு தடை விதிக்க வழக்குப் பதிவு செய்தனர்.

விசாரித்த நீதிமன்றம், அகுமா என்ற பெயரை ஜப்பானில் யாரும் சூட்டக்கூடாது என தீர்ப்பளித்தது. அந்த குழந்தையின் பெயர் மாற்றப்பட்டது.

ஜப்பானிய கதைகளில், அகுமா என்பது ஒருவகை ராட்சத உருவத்தைக் குறிக்கும். மேலும், ‘ஸ்ட்ரீட் பைட்டர்’ என்ற விளையாட்டில் பிரசித்தி பெற்ற கதாபாத்திரமாகவும் இது உள்ளது.

ஹரி பொட்டர்:

புகழ் பெற்ற எழுத்தாளர் ஹரி பொட்டர். இவரது பெயரை சூட்ட, வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை திரைப்படங்கள் மற்றும் கார்ட்டூன் பாத்திரங்களின் பெயர்களை சூட்டவும் அங்கே தடை உள்ளது.

மலக்:
மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவில், ‘மலக்’ என்ற பெயர் சூட்ட தடை உள்ளது. இது, தேவதை, வானவர் என பொருளில் பயன்படுகிறது. எனவே, இந்த பெயரை சூட்டினால் அந்நாட்டில் கடும் தண்டனை உண்டு.

 

You must be logged in to post a comment Login