Cookery

பேக்ட் ஃபிஷ்

By  | 

தேவையான பொருட்கள்

முழு மீன் – 1
வெங்காயம் – 1
தக்காளி -1
பச்சை மிளகாய் – 3
குடைமிளகாய் – 1
மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
சீரகத் தூள் – 1 தேக்கரண்டி
மிளகுத் தூள் – 1/2 தேக்கரண்டி
தந்தூரி மசாலாத் தூள் – 1 தேக்கரண்டி
இஞ்சி,வெ.பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
ஒலிவ் எண்ணெய் – 2 தேக்கரண்டி
முட்டை வெள்ளைக்கரு – 1
உப்பு – தேவையான அளவு

செய்முறை

  • மீனை சுத்தம் செய்து அதில் ஆங்காங்கே கீறி வைக்கவும்.
  • வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், குடை மிளகாயை நறுக்கி வைக்கவும்.
  • தூள் வகைகளை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் இஞ்சி, வெ.பூண்டு விழுது, உப்பு, முட்டை வெள்ளைக்கரு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • கலந்துள்ள மசாலாவை மீனின் மீது நன்றாக பூசி அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
  • பின் பேக்கிங் ட்ரேயில் சிறிது எண்ணெய் தடவி மீனை பேக் செய்யவும்.
  • இடையிடையே மீனை திருப்பிவிட்டு ஒலிவ் ஒயில் தெளிக்கவும்.
  • பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், குடைமிளகாயை மேலே தூவி 10 நிமிடம் வேகவிடவும்.
  • இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக பரிமாறவும்.

You must be logged in to post a comment Login