Antharangam

மருத்துவ ஆலோசனை பெறுங்கள்

By  | 

கேள்வி: 

என் வயது 24. நான் 14 வயதிலேயே பூப்பெய்திவிட்டேன். நான் பூப்படைந்த 45ஆவது நாளிலே எனக்கு மாதவிடாய் வந்துவிட்டது. அதிலிருந்து எனக்கு சீராகவே மாதவிடாய் வந்துகொண்டிருந்தது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக ஒரு மாதத்துக்கு இரண்டு முறை மாதவிடாய் ஏற்படுகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும்? இதனால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏதும் உண்டாகுமா?

பதில்: 

அந்தரங்கம் பகுதிக்கு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்தடைகின்றன. இப்படியாக வரும் கடிதங்களை, அவை எமக்குக் கிடைத்த திகதியின் அடிப்படையிலேயே தெரிவுசெய்கிறோம். இதனால், நீங்கள் அனுப்பும் கடிதத்துக்கான பதில்கள் பிரசுரமாக ஓரிரு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை தாமதமாக வாய்ப்புகள் உண்டு. எனவே, தயவுசெய்து நோய்களுக்கான மருத்துவ ஆலோசனையை அந்தரங்கம் பகுதியின் வாயிலாக அறிந்துகொண்டு சிகிச்சை எடுப்பதற்குள் நோய் முற்றிவிட வாய்ப்புகள் உள்ளன.

உங்களது கடிதமும் அப்படித்தான். மாதவிலக்குப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே களைந்துவிட வேண்டும். அல்லாவிட்டால், அது மகப்பேற்றில் பிரச்சினைகளை உருவாக்க வாய்ப்புகள் உள்ளன. உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா, குழந்தைகள் இருக்கின்றனரா என்பது பற்றி நீங்கள் குறிப்பிடவில்லை. எனவே, உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

You must be logged in to post a comment Login