Q&A

மாத்திரை போடுவது சரியா?

By  | 

 கேள்வி:

மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுவலிக்கு மாத்திரை போடுவது சரியா?

பதில்:

தவறு. மாத்திரை வலிநிவாரணி என்பது வரைக்கும் சரிதான். ஆனால், எதற்கெடுத்தாலும் வலிநிவாரணிகளைப் பயன்படுத்துவதை நம் நாட்டு மக்கள் ஒரு சம்பிரதாயமாகவே கொண்டுள்ளார்கள். இது தவிர்க்கப்படவேண்டியது. மேலும், இந்நாட்களில், நோய்கள் புதுப் புது அவதாரம் எடுத்துள்ளன. எந்தவொரு சிறு அறிகுறியும்கூட, மிகப்பெரிய நோய்க்கு நம்மை ஆளாக்கிவிடும்.

மாதவிடாய்க் காலங்களில் வலி இருப்பது சகஜம்தான். ஓரிரு முறை வலி சற்று அதிகப்படவும் இடமுண்டு. ஆனால், தொடர்ச்சியாக அதீத வலி ஏற்படும் பட்சத்தில், அது உடனடியாக மருத்துவ மேற்பார்வைக்குக் கொண்டுசெல்லப்படவேண்டும். கருப்பைக் கட்டிகள் போன்ற, பெண் உடலுக்கென்றே பிரத்தியேகமான பல பிரச்சினைகளின் அறிகுறியாகவும் இது இருக்கலாம்.

You must be logged in to post a comment Login