Cinema

மாளவிகா ‘வேர்களை தேடி’!

By  | 

குர்தா, பேன்ட், மிடி, சுடிதார் போன்ற உடைகளை அணிந்து, விதம் விதமாக புகைப்படங்களை எடுத்து, அவற்றை சமூக வலைதளமான, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, தன் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்து வந்த மாளவிகா மோகனன், இப்போது, பாரம்பரியத்துக்கு திரும்பியுள்ளார்.

Actress Malavika mohanan

இவர், கேரளாவைச் சேர்ந்தவர். கேரளாவில் பழங்காலத்தில் பெண்கள் அணியும் பாரம்பரிய உடையான, முண்டு, வேட்டியை அணிந்தபடி தோன்றும் அட்டகாசமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, பரபரப்பை ஏற்படுத்திஉள்ளார் மாளவிகா. இந்த புகைப்படங்களுக்கு, ‘வேர்களை தேடி’ என, தலைப்பிட்டுள்ளார்.

You must be logged in to post a comment Login