
Astrology
மித்திரனின் வாரபலன் 17.06.2018 முதல் 23.06.2018 வரை
மேஷம்:அளப்பரிய நற்பலன் கிடைக்கும். மனதில் உத்வேகமும், செயல்களில் வசீகரமும் ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்வு உண்டாகும். பணவரவு சீராகும். பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றுவீர்கள். எதிரிகள் மறைமுகமாக கெடுதல் செய்வர். கவனம் தேவை. வியாபாரத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவது நல்லது. பணியாளர்கள் பணி இலக்கை பூர்த்தி செய்து சலுகை பெறுவர். பெண்கள் தெய்வ வழிபாடு நடத்துவர்.
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
ரிஷபம்:புதிய முயற்சியால் பணி சிறப்பாக நிறைவேறும். அறிமுகம் இல்லாதவர்க்கு வாகனத்தில் இடம் தர வேண்டாம். பிள்ளைகள் உங்கள் சொல் கேட்டு செயல்படுவர். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரிசெய்ய வேண்டும். பணியாளர்கள் பணியிடத்தின் சூழல் உணர்ந்து செயற்படவும். பெண்கள் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்கக்கூடாது.
அதிர்ஷ்ட நாள்: புதன்
மிதுனம்:நன்மை வந்து சேரும். மனதில் குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. நண்பரின் ஆலோசனையால் உரிய வழிகாட்டுதல் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். உடல்நலம் ஆரோக்கியம் பெறும். வியாபாரத்தில் ஆதாயம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை தவறாமல் பின்பற்றவும். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனம் பின்பற்றுவர்.
அதிர்ஷ்ட நாள்: சனி
கடகம்:எதிர்கால தேவைகளுக்காக திட்டமிடுவீர்கள். உடன்பிறந்தவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாய்வழி உறவினர் அன்பு பாராட்டுவர். பிள்ளைகள் படிப்பு, வேலைவாய்ப்பில் மேம்படுவர். சுப நிகழ்வுகளில் பங்கேற்பீர்கள். வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை செழிக்கும். சேமிப்பு கூடும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள் நிம்மதி நிறைந்த வாழ்வு பெறுவர்.
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
சிம்மம்:மனதில் உறுதியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். பணியில் உருவான குறுக்கீடுகள் வந்த சுவடு தெரியாமல் விலகும். பிள்ளைகள் படிப்பு, செயல்திறனில் மேம்படுவர். வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அபரிமிதமாக வளர்ச்சி பெறும். பணியாளர்களுக்கு விரும்பிய சலுகை கிடைக்கும். பெண்கள் தாய்வீட்டுக்கு இயன்ற அளவில் உதவுவர்.
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
கன்னி: எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். பணிகளில் திறமை பளிச்சிடும். உடன்பிறந்தவர் உறுதுணையாக செயற்படுவர். விரும்பியபடி புதிய வாகனத்தை வாங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாத செயல்களை சரி செய்வீர்கள். கடன் தொந்தரவு குறையும். வியாபாரம் செழித்து லாப விகிதம் அதிகரிக்கும். பணியாளர்கள் எளிதாக பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் பணச்செலவில் சிக்கனம் பின்பற்றுவர்.
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
துலாம்: குடும்ப தேவைகளுக்காக கடன் பெறுகின்ற சூழ்நிலை மாறும். பேச்சிலும் செயலிலும் புத்துணர்வு உண்டாகும். பிள்ளைகளின் நற்செயல் பெற்றோர்க்கு பெருமை சேர்க்கும். அளவான உழைப்பு, சீரான ஓய்வு உடல்நலத்தை பாதுகாக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி பெற அனுகூல சூழ்நிலை உருவாகும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து நிர்வாகத்தின் நன்மதிப்பை பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்குவர்.
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி
விருச்சிகம்: சூழ்நிலை உணர்ந்து பிறரிடம் பேசுவது நல்லது. வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். பிள்ளைகள் உங்களின் வழிகாட்டுதல்படி நடந்து கொள்வர். பூர்வ சொத்தில் வளர்ச்சியும் பணவரவும் கூடும். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். வியாபாரத்தில் முன்னேறுவீர்கள். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி வந்து சேரும்.
அதிர்ஷ்ட நாள்: சனி
தனுசு: வாழ்வியல் நடைமுறையில் நவீன மாற்றம் உண்டாகும். அதிக பணவரவால் குடும்பத் தேவை பூர்த்தியாகும். சிலர் வசதியுடைய வீட்டுக்கு இடம் மாறுவர். பிள்ளைகளின் செயல் சிறப்பாக அமைந்திட உதவுவீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கூடும். வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் குடும்ப எதிர்கால நலனில் கவனம் கொள்வர்.
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
மகரம்: சூழ்நிலை உணர்ந்து பேசுவது நன்மையளிக்கும். குடும்பத்தினரின் தேவையை சிக்கன செலவில் நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் ஆன்மிகத்தில் சிறந்து விளங்குவர். பணக்கடன் ஓரளவு அடைபடும். வியாபாரம் செழிக்க விடாமுயற்சியும் உழைப்பும் தேவைப்படும். பணியாளர்கள் பணியிட சூழல் உணர்ந்து செயற்படவும். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
கும்பம்:சமூக நிகழ்வுகளை தெளிந்த மனதுடன் அணுகுவீர்கள். உங்கள் மீதான மற்றவரின் பார்வை மதிப்பு மிகுந்ததாக இருக்கும். பிள்ளைகளின் செயல்களில் குளறுபடி ஏற்படலாம். பூர்வ சொத்தில் நம்பகமானவர்களை பணியமர்த்துவது நல்லது. நோய் தொந்தரவு குறையும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். வியாபாரத்தில் நன்மை உண்டு. பணியாளர்கள் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்தவும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர்.
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி
மீனம்: அன்றாட செயல்களில் அக்கறையுடன் ஈடுபடுவீர்கள். பொது விடயங்களில் ஆர்வம் கூடும். தாய்வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். பிள்ளைகள் படிப்பு, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். பகைவரால் உருவான கெடுசெயல் பலமிழக்கும். ஆரோக்கியம் பலம் பெறும். வியாபாரம் செழித்து பணம் சேமிப்பாகும். பணியாளர்கள் அதிக தொழில்நுட்பம் அறிந்துகொள்வர். பெண்கள் கலையம்சம் நிறைந்த வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர்.
அதிர்ஷ்ட நாள்: புதன்
You must be logged in to post a comment Login