Love

மித்திரன் கவிதைகள்

By  | 

பகல் நிலவு

இரவில் மட்டுமல்ல

நான்

பகலிலும் நிலவை

கேட்கிறேன்

பெண்ணே

நீ

அருகில் இல்லாத

பொழுதுகளில்

என் தனிமையை

போக்கிட…

சுப்பிரமணியம் ஜெயரூபன்,
பருத்தித்துறை.

அதிசய நிலவு

சென்ற மாதப்

பௌர்ணமியிலே

நீ மஞ்சள் நிலவாக

உலாவரக்கண்டு

உன்னில்

காதல் கொண்டேன்.

இந்த மாதப்

பௌர்ணமியிலே

நீ

சிகப்பு நிலவாக

மாறியதைக் கண்டு

என் காதலை

மறந்து போனேன்.

நீ என்ன

இருபத்தோராமாண்டின்

கிரகணம் மூடிய

அதிசய நிலவோ?

இளம்பிறை யோகன்,
புத்தளம்.

இரவு நிலவு

சிந்திக்க தெரியாத

நிமிடங்கள்

வாழ்க்கையின்

மீளா துயரங்கள்

அனைத்து வகையிலும்

ஏற்படும் ஏமாற்றங்கள்

என கவலைகள்

அனைத்தும்

கண் விழிக்கும்

நேரத்தில் நடு

இரவுகளில்

நானும் நிலவும்

சேர்ந்தே தேடுகிறோம்.

புவனேஸ்,
சாமிமலை.

வெண் நிலவுதாய்

கார் கூந்தல் வாரி எடுத்து

கருமை நிற பொட்டுவைத்து

முதல் பிறை

மூன்றாம் பிறை தாயாக

இரவு வானில் பாலூட்டி

தாலாட்டி வளர்கிறாள் என்

வெண் நிலவுத்தாய்

ரொபின் குலே

மெல்லமாய்
செல்லமாய்

இரவெல்லாம்

குளிர்காற்றில்

தவழ்ந்த நிலவு

மெல்லமாய்

செல்லமாய்

சூரியனை தட்டி

எழுப்ப ஆயத்தமாகியது

வானில்…

ப்ரியா காசிநாதன்,
யாழ்ப்பாணம்.

 

முகமூடி

இந்த நிசப்தமான இரவு

எத்தனை முகமூடிகளை

கழற்றி எறிகின்றது

மகள் கேட்டதை எல்லாம்

வாங்கி தந்துவிட்டு

நாளைய பொழுதுக்கு

என்ன செய்தென

அறியாமல்  தூங்கிய

அப்பாவின் ஆடம்பர முகமூடி

சுவஸ்த்திக்கா றெங்கராஜ்

ஹைக்கூ கவிதைகள்

 

சூரியன்

பகலின்

அதிபதி

ΟΟΟ

நிலவு

இருளின்

சொந்தக்காரன்

ΟΟΟ

நட்சத்திரம்

வானத்தின்

நெல் படுக்கை

ΟΟΟ

மின்னல்

வானத்தின்

ஒளிக்கீற்று

ΟΟΟ

இடி

ஓசையின்

ராசா

ΟΟΟ

காற்று

தழுவிச்

செல்லும்

ஸ்பரிசம்

ΟΟΟ

முகில்

தூது செல்லும்

வெள்ளைக் காகிதம்

-மியூரியல் ஜெயானந்தசாமி,
மட்டக்களப்பு.

 

 

You must be logged in to post a comment Login