Mother

மீண்டும் வரம் வேண்டும்

By  | 

என் தாயின் கருவறையில் உறங்கும்போது
உணரவில்லை இவ் உலகை
அங்கு இருள் என்று அன்னையின் வயிற்றை
எட்டி உதைத்து வெளியில் வர துடித்தேன்

அவளின் மடியில் இருக்கும் போதும்
மனம் உறங்கவில்லை எனக்கு
மடியை விட்டு கீழே இறங்கி
மண்ணைதொட தவழ்ந்தேன்

அவள் கைகள் பிடித்து கூட்டி செல்கையில்
கர்வம் கொண்டு நானோ
தனியாய் நடக்க எண்ணி தடிக்கி விழுந்தேன்

அன்னையின் நிழலில் வாழும் வரை
அது கோடை வெயிலென உளம் குமிரி நின்றேன்
இன்றோ சுட்டெரிக்கும் சூரியனின் அருகில்
பொசுங்கிக்கொண்டிருக்கின்றேன்

தாயே உன் கருவறையில் மீண்டும்
கண் உறங்கும் வரம் கிடைக்குமா?

You must be logged in to post a comment Login