General

மீன் வலையில் சிக்கிய பாம்பு

By  | 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மீன் விற்பனை நிலையத்துக்கு மீனவர் ஒருவர் புதிய வகை மீன் என நினைத்து, தான் கடலில் பிடித்த கடல் பாம்பை சந்தைக்கு கொண்டு சென்றுள்ளார்.
குறித்த மீனவர் மீன் பிடிக்கும்போது அவரது வலையில் ஒரு ‘கடல் பாம்பு’ சிக்கியுள்ளது. அதை ஒரு புது வகை மீனினம் என எண்ணி, விற்பனை நிலையத்துக்கு கொண்டு சென்று ஏனைய மீனவர்களிடம் காண்பித்துள்ளார். அதை பார்த்த மற்ற மீனவர்கள், அது கடலில் உள்ள ‘அஞ்சாலை’ எனும் ஒரு வகை பாம்பு என அடையாளம் காட்‍டியுள்ளனர். அந்த கடல் பாம்பின் நீளம் 7 அடி, நிறை 8 கிலோ.

You must be logged in to post a comment Login