Cookery

முட்டை பஜ்ஜி

By  | 

தேவையான பொருட்கள்

முட்டை – 6

கடலை மா – 2 கோப்பை

மிளகாய்தூள் – 1 தேக்கரண்டி

சீரகம் – 1/2  தேக்கரண்டி

இஞ்சி,வெ.பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

மசாலாத் தூள் – 1/2 தேக்கரண்டி

உப்புத்தூள் – 1 தேக்கரண்டி

ஆப்பச்சோடா – 1 சிட்டிகை

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முட்டைகளை வேகவைத்து, தோலை உரித்துக் கொண்டு இரண்டாக நறுக்கி வைக்கவும்.

பிறகு ஒரு பெரிய கோப்பையில் கடலை மாவுடன் எண்ணெயை தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் போட்டு வேண்டிய அளவு தண்ணீரை ஊற்றி கெட்டியாக நன்கு கலக்கிவைக்கவும்.

அரைமணி நேரம் கழித்து சட்டியில் எண்ணெயை காயவைத்து முட்டைகளை ஒவ்வொன்றாக கடலைமாவுக் கலவையில் தோய்த்து மஞ்சட்கரு வெளியெ வந்துவிடாமல், எண்ணெயில் மெதுவாக போட்டு பஜ்ஜியாக பொரிக்கவும்.

தக்காளி கெட்சப்புடன் சூடாக ப்ரிமாறவும்.

You must be logged in to post a comment Login