Others Poetries

முதுமையிலும் துணை நீதானே!

By  | 

பூட்டிய இதயத்தை
திறந்தவள் நீ தானே!
வாடிய முகத்தின் வாட்டம்
போக்கியவள் நீ தானே!
வர்ணமாய் வாழ்வை
மாற்றியவள் நீ தானே!
வானம் பாடியாய் மகிழ்வை
தந்தவள் நீ தானே!
வஞ்சமில்ல நெஞ்சத்தை
தந்தவள் நீ தானே!
முப்பொழுதும் கற்பனையில்
நீ தானே
முதுமையிலும் துணை
நீ தானே!

திருமதி.மியூரியல் ஜெயானந்தசாமி,
மட்டக்களப்பு.

You must be logged in to post a comment Login