Astrology

மூன்றாம் எண்ணுக்குரிய எண் கணித ரகசியங்கள்!

By  | 

3, 12, 21, 30 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கான எண்கணித பலன்கள். அத்துடன் பிறந்த திகதி தெரியாத அல்லது தெரியாமல் தங்களிது பெயரின் முதல் எழுத்து C, G, L. S, என்றிருப்பவர்களுக்கான எண் கணித பலன்களையும் பார்க்கலாம்.

பெற்றோர்கள் மீது இவர்கள் நம்பிக்கை மிக்கவர்களாக இருப்பார்கள். கடவுள் மீது நம்பிக்கைக் கொண்டவர்களாகவும்,இறை நம்பிக்கைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மூன்றாம் திகதியில் பிறந்த உங்களுக்கு இயல்பாகவே தலைமை பண்பு இருக்கும். அதையே நீங்களும் விரும்புவீர்கள். நிறுவனம், விற்பனை நிலையம், அலுவலகம் அல்லது தொழிற்சாலையில் நீங்கள் பணியாளராக வேலை செய்ய விரும்ப மாட்டீர்கள். ஆனால் மேற்பார்வையிட சொன்னால், மற்றவர்களை வேலை வாங்க சொன்னால்… அதனை அற்புதமாகவும், நேர்த்தியாகவும் செய்வீர்கள். கௌரவம், மதிப்பு, மரியாதை ஆகியவற்றை எப்போதும் எதிர்பார்ப்பீர்கள். தற்போதைய சூழலில் யாராவது உங்களை மென்மையாக கலாய்த்தாலும், அவர்கள் மீது அதிருப்தி ஏற்படக்கூடும். அவர்களின் நட்பை ஒதுக்கவும் தீர்மானிப்பீர்கள்.

உங்களுக்கு தர்மசங்கடமான தருணங்களில் அல்லது சிக்கலான தருணங்களில் 9, 18, 27 ஆகிய திகதிகளில் பிறந்த தோழிகள் அல்லது நண்பர்கள் தாமாக முன்வந்து உதவுவார்கள். சிலருக்கு பிறந்த திகதி, மாதம், ஆண்டு ஆகியவற்றில் கூட்டுத்தொகை 9 ஆக இருப்பவர்களும் தாமாக முன் வந்து உதவி செய்வார்கள். அதே தருணத்தில் இந்த திகதிகளில் பிறந்தவர்களுடன், உங்களுக்கு பருவ வயதில் அறிமுகமானால், அவர்கள் மீது காதல் ஏற்படக்கூட வாய்ப்புமுண்டு. இந்த காதல் திருமணத்தில் முடியும். அதையும் கடந்து பெற்றோர்கள் மற்றும் சூழலின் காரணமாக காதல் கைகூட வில்லை என்றால், திருமணத்திற்கு பிறகும் இவர்கள் மீதான கண்ணியமான நட்பு தொடரும். ஏனெனில் 9,18,27ஆகிய திகதிகளில் பிறந்த எதிர்பாலினத்தவர்கள் உங்களுடைய முதன்மையான காந்த எண்கள் என சொல்லலாம்.

மூன்றாம் திகதிகளில் பிறந்த உங்களுக்கு தோலின் உட்பகுதியில் பாதிப்பு ஏற்படும். சிலருக்கு குறை பிரசவம் போன்ற உபாதைகள் ஏற்படும். இவர்களின் ஜாதகத்தில் ராகு, கேதுவுடன் குருவின் தொடர்பு அல்லது பார்வை இருந்தால் திருமணமாகி முதல் பிரசவத்திலேயே மேற்கூறிய உபாதைகள் நடைபெறலாம். சிலருக்கு இரண்டாவது பிரசவத்தில் அல்லது மூன்றாவது பிரசவத்தில் இவை நடைபெறக்கூடும். இவர்களின் வயிறு சற்று உப்புசமாக இருக்கும். அதாவது இளம் தொப்பையுடன் இருப்பார்கள்.இவர்கள் சைஸ் ஜீரோவிற்கு முயற்சி செய்தாலும் வயிற்றில் சற்று கூடுதலான கொழுப்பு இருந்துக்கொண்டேயிருக்கும். சிலருக்கு திருமணமாகி முதல் பிரசவத்திற்கு பிறகும், இவர்களின் வயிறு மட்டும் சற்று காற்றடைத்த பை போல் உப்பலாக இருக்கும். ஆனால் உடலின் ஏனைய பாகங்கள் இயல்பாகவே இருக்கும்.

பெற்றோர்கள் நல்வழிகாட்டுவார்கள் என்ற நம்பிக்கையிருப்பதால், திருமண முயற்சியில் அனைத்தும் தங்களுக்கு சாதகமாக நடக்க வேண்டும் என்று உறுதியான நம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள். அவர்களின் இந்த நம்பிக்கை 18, அல்லது 27 வயதில் சாத்தியமாகும். இவர்கள் இயல்பிலேயே துறைசார்ந்த அனுபவசாலிகளையும், சாதனையாளர்களையும் தங்களுக்கான வழிகாட்டலாக கொண்டிருப்பதால், அவர்களின் ஆசியை எப்போதும் நாடுவார்கள். சில தருணங்களில், சில விடயங்களில் மட்டுமே விட்டுக் கொடுக்கத் தயாராக இருப்பார்கள். ஏனைய நேரங்களில் தாங்கள் கொண்ட கொள்கையில் உறுதியானவர்களாகவேயிருப்பார்கள்.

திருமணமான பிறகு புகுந்த வீட்டுக்கு சென்றவுடன் கணவன் மற்றும் கணவன் வீட்டாரின் மதிப்பு மரியாதையை உயர்த்துவதற்கு நீங்கள் பாடுபடுவீர்கள். உங்களுடைய வருகை அந்த வீட்டாரின் நிலையை மாற்றும். அவர்களின் சமூக அந்தஸ்த்தை மேம்பட்ட நிலைக்கு உயர்த்த உங்களின் தோற்றப் பொலிவு, பேச்சுத்திறமை, நிர்வாக ஆற்றல் போன்றவை பேருதவி புரியும்.

3, 12, 21, 30 ஆகிய திகதிகளில் பிறந்திருந்தாலும், அதிர்ஷ்டத்தை பொறுத்தவரை 12ஆம் திகதி பிறந்தவர்கள் முதலிடத்தில் இருப்பார்கள். ஏனைய திகதியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் தசமம் ஒன்று என்றளவில் குறைவு என்றாலும், கடுமையாக உழைத்து இலட்சியத்தை அடைந்துவிடுவார்கள்.

இவர்களது கைப்பேசியில் லேட்டஸ்ட் அப்ஸ் எதுவும் இருக்காது. இவர்கள் கைபேசியை மற்றவருடன் தொடர்பு கொள்ளவும், பணிநிமித்தம் காரணமாகத்தான் பயன்படுத்துவர்களேத் தவிர, வேறு எதற்கும் பயன்படுத்த மாட்டார்கள், காதலிக்கும் போது கூட கைபேசியை அளவாகத்தான் பயன்படுத்துவார்கள்.

இவர்கள் ஒரு காரியத்தை வியாழக்கிழமை அன்று தொடங்கினால்.. வெற்றி பெறுவார்கள். வியாழக் கிழமைகளில் விரதமிருந்து, தங்களின் இஷ்டதெய்வத்தை வணங்கினால்… நினைத்த காரியம் நடைபெறும். சிலருக்கு ஜீவசமாதிகளில் உறைந்திருக்கும் சித்தர் வழிபாடு கைகொடுக்கும். மஞ்சள் வண்ண ஆடைகளை பயன்படுத்துவது, மஞ்சள் தேய்த்து குளிப்பது, உணவில் சிறிதளவு மஞ்சளையும், சிறிதளவு நெய்யையும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால்… ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக கர்ப்பப்பை பலப்படும். இதன்காரணமாக பிசிஓடி போன்ற பிரச்சினைகளை வராமல் தடுக்கலாம்.

கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள் பேச்சுப்போட்டியில் பங்குபற்றலாம். வெற்றி கிடைக்கும். அதேபோல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணி கிடைத்தால், அதனை உங்களால் மற்றவர்களை விட சிறப்பாக செய்ய இயலும். உங்களது பேச்சும், தொனியும் நிகழ்ச்சியை சுவாரசியமாக்கும். மேடைப்பேச்சு, ஆன்மீக சொற்பொழிவு, இலக்கிய கூட்டங்கள், சுயமுன்னேற்ற உரை போன்றவற்றில் ஈடுபட்டால் உங்களின் தனித்துவம் வெற்றிப்பெறும்.

5,14, 23 மற்றும் 6,15,24 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுடன் கட்டாயமாக பேசவேண்டிய நிலை ஏற்பட்டாலோ அல்லது பணியாற்றவேண்டிய நிலை உருவானாலோ எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். இவர்கள் உங்களை தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ள நேரிடும்.

தொகுப்பு: அஸ்வினிப்ரியன்.

 

You must be logged in to post a comment Login