Love

மௌன மொழி

By  | 

நீ எனக்குள்ளும் நான் உனக்குள்ளும்

தொலைந்து வாழ்ந்தோம்

நம் உதடுகள் பேச மறுத்ததை நம்

கண்கள் பரிமாறிக்கொண்டன.

உலகில் எங்கும் இல்லாத அந்த

புதிய மொழி இதுவோ!

யாருக்கும் புரியாத அந்த

மொழிகளின் அர்த்தம்

புரிந்தது நம் இருவருக்கும் மட்டுமே.

உதடுகள் சொல்லாத பல கதைகளை

படமாய் காட்டியது உன் கண்கள்

இருந்தும், இன்று ஏனோ ! நீயும் உன்

ஐம்புலன்களும் மௌனமாகிறது.

விடைதெரியாத கேள்விகளுடன்

என்றும் உன்னவன்.

ரிஸ்மா தாஹா,
இறக்குவானை.

You must be logged in to post a comment Login