Cinema

டிசம்பரில் திருமணம்

By  | 

தமிழ், தெலுங்குத் திரையுலகில் நீண்ட காலமாக பல வெற்றிப் படங்களைத் தயாரித்த நிறுவனம் சுரேஷ் புரொடக்ஷன்ஸ். அந்நிறுவனத்தை உருவாக்கி பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் மறைந்த தயாரிப்பாளர் ராமா நாயுடு. அவருடைய மகன் வயிற்றுப் பேரன்தான் ராணா டகுபதி.

36 வயதான ராணா டகுபதி சில தினங்களுக்கு முன்தான் தன்னுடைய காதலி மிஹீகா பஜாஜ்-ஐ அறிமுகம் செய்து வைத்தார். அவர்களுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில வருடங்களாகவே ராணாவைப் பற்றி பல்வேறு செய்திகள் மீடியாக்களில் அடிக்கடி வந்தன. அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியதாகவே அதிகம் இருந்தது.

இந்நிலையில் ராணாவின் காதல் பற்றி தெரிய வந்ததும் அவருடைய குடும்பத்தினர் அதிக மகிழ்ச்சியில் உள்ளார்களாம். இப்போதே அவர்கள் திருமண வேலைகளை ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். டிசம்பர் மாதம் திருமணம் நடக்கலாம் என்று டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

ராணா தற்போது ‘விராத பர்வம்’ படத்தில் நடித்து வருகிறார். அவர் நடித்து முடித்துள்ள ‘காடன்’ படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஊரடங்கு முடிந்த பின் வெளியாக உள்ளது.

You must be logged in to post a comment Login