Cinema

ராணா டகுபதி – மிஹீகா பஜாஜ் திருமண புகைப்படங்கள்

By  | 

பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி – மிஹீகா பஜாஜ் நேற்று திருமண பந்தத்தில் இணைந்துக் கொண்டனர்.

‘லீடர்’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார் நடிகர் ராணா டகுபதி. தமிழில் ஆரம்பம், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் “பாகுபலி” படமே இவரை உலகம் முழுதும் பிரபலமாக்கியது. தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் டகுபதி சுரேஷ் பாபுவின் மகன்தான் ராணா.


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்துவரும் ராணா, ஹைதராபாதைச் சேர்ந்த தனது காதலி மிஹீகா பஜாஜை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கடந்த மே மாதம் அறிவித்தார்.. மிஹீகா பஜாஜ் – ராணாவின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதால், சமீபத்தில் குடும்பத்தார் முன்னிலையில் ராணா – மிஹீகா நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
திருமணத்தில் சமந்தா, நாகசைதன்யா, வெங்கடேஷ், ராம் சரண் என இருவீட்டாரைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.


ராணா வீட்டினர் மூலம் வீட்டிலே உணவு சமைக்கப்பட்டு விருந்தினர்களுக்கு பரிமாறப்பட்டுள்ளது. திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வீட்டுசாப்பாடு கொடுத்து சிறப்பித்துள்ளார் சுரேஷ் டகுபதி.

 


தற்போது ராணா- மிஹீகா பஜாஜ் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. திரையுலக பிரபலங்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

You must be logged in to post a comment Login