Children

வயதுக்கு வந்த பெண்ணிற்கு தாய் என்னென்ன வழியில் உதவலாம்?

By  | 

ஒவ்வொரு பெண்னும் தன் வாழ்நாளில் கடந்து வந்த முக்கிய மாற்றம் இது. எப்படியிருந்தாலும் தான் தாயாகி தன் மகள் இந்த மாற்றத்தை சந்திக்கும் போது ஒவ்வொரு தாயும் சிறிது தடுமாறுகின்றார்கள். இந்த உடல் ரீதியான இயற்கை மாற்றத்துக்கு முகம்கொடுப்பது பற்றி ஒரு தாயால் தன் அனுபவத்தையும் சேர்த்துச் சொல்லி கொடுக்க முடியும். முதல் முறையாக மாதவிடாய் வந்தபின் ஒவ்வொரு பெண்னும் அச்சம் கொள்வது இயல்பானதே.

நீங்கள் உங்கள் பெண்குழந்தைகளுக்கு உதவக்கூடிய வழிகள் சில..

  • சானிடரி நாப்கின்களை எப்படி உபயோகிப்பது, மணிநேரத்திற்கு ஒருமுறை மாற்றவேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள். இந்த இரண்டையும் விட முக்கியமானது பயன்படுத்திய நாப்கின்களை எப்படி அப்புறப்படுத்துவது என்று சொல்லிக்கொடுங்கள்.

 

  • ரொம்பவும் முக்கியமானது எப்படி அந்தரங்க உறுப்பை ஆரோக்கியமான முறையில் வைத்துக் கொள்வது என்று சொல்லிக் கொடுங்கள். இப்போது Vwash என்று ஒரு க்ளீனிங் லிக்விட் கிடைக்கிறது. குளிக்கும்போது அதில் இரண்டு மூன்று சொட்டுகள் கையில் எடுத்துக்கொண்டு நுரை வரும்படி செய்து பிறகு பெண் உறுப்பில் தேய்த்து நிறைய நீர் விட்டு சுத்தம் செய்ய வேண்டும். சாதாரண நாட்களில் காலை மாலை இரண்டு வேளையும் மாதவிடாய் காலத்தில் நாப்கின் மாற்றும் ஒவ்வொரு தடவையும் இந்த லிக்விட் போட்டு கழுவுவது நல்லது.

 

  • நாப்கின் வைத்துக் கொள்வதால் அந்த இடங்களில் rashes வரலாம். நடக்கும்போது ஏற்படும் உராய்வினால் இருபக்கங்களிலும் பொரிபொரியாக தோலின் தடிப்பு ஏற்படலாம். அரிப்பு ஏற்படலாம். இவற்றிற்கு சாதாரண வாசலின் (vaseline) தடவலாம்.

 

  • நாம் முகத்தை அடிக்கடி கழுவுவோம். கால்கைகளைக் கழுவுவோம். அத்தனை முக்கியத்துவம் நம் அந்தரங்க உறுப்பிற்குக் கொடுக்க வேண்டும் என்பதை உணரச்செய்யுங்கள்.

 

  • வயதுக்கு வருவது பற்றிப் பேச பல தாய்மார்கள் தயங்குகிறார்கள். மூடிமறைக்கவோ பேசவோ கூடாத ஒன்றல்ல. அம்மாக்கள் இதைப் புரிந்து கொண்டால் குழந்தைகளும் தைரியமாக தங்கள் மனதில் தோன்றும் சந்தேகங்களை தாயிடம் தைரியமாகக் கேட்பார்கள்.

 

  • இந்த சமயத்தில் சில குழந்தைகளுக்கு வயிற்றுவலி வரும். இதற்கு சுலபமான வழி இஞ்சிக் கஷாயம். இஞ்சியை தோல் சீவி நன்றாக துருவிக் கொள்ளுங்கள். ஒரு டம்பளர் நீர் வைத்து இஞ்சித் இஞ்சி மற்றும் வெல்லத்தை போட்டு கொதிக்க வையுங்கள். வடிகட்டி ஒரு கால் டம்பளர் கொடுக்கலாம்.

 

  • நல்ல போஷாக்கான உணவு கொடுங்கள். பழங்கள், புத்தம் புதிய காய்கறிகள் கொடுங்கள். முக்கியமாக கீரைவகைகள் கொடுக்கலாம். நிறைய இரும்பு சத்து உள்ள உணவுகளைக் கொடுங்கள்.
  • மார்பகம் பெரிதாக ஆரம்பிக்கும். அங்கும் வலி ஏற்படலாம். சரியான அளவு ப்ரா வாங்குவதற்கு குழந்தைக்கு உதவுங்கள். பருத்தி உள்ளாடைகள் அணியப் பழக்குங்கள்.

You must be logged in to post a comment Login