Jokes

வாங்க சிரிக்கலாம்…!

By  | 

தரகரே பொன்னு
கருப்பாயிருந்தாலும் சிவப்பாயிருந்தாலும்
பரவாயில்லை ஆனா பொன்னு கண்டிபா
ஸ்மார்ட் போன்வச்சுருக்கனும்

தரகர்: ஏன் சார்

ஏனா ஸ்மார்ட் போன் வச்சுருக்க பொன்னு தான்
குனிஞ்ச தலை நிமிராம
போகும்.

***********************************************************************************************************

தோசையை நின்னுக்கிட்டே
ஊத்தணும்
ஆனா கால் வலிக்கும்

இட்லிய ஊத்திட்டு
உட்கார்ந்துக்கலாம்
ஆனா நிறைய பாத்திரம்
கழுவனும்

துன்பம் எதில்தான் இல்ல..?

***********************************************************************************************************

எங்க அம்மாவை வீட்டை விட்டு போன்னு

சொன்னியாமே!
அப்படியேல்லாம் மரியாதை இல்லாம
சொல்வேனா?

போங்கன்னுதான் சொன்னேன்

***********************************************************************************************************

டிவி ரிமோட் தரமுடியாதுன்னு
சொன்ன தங்கச்சியை தலையில ரெண்டு
கொட்டு கொட்டினேன்

அவ கொஞ்சம் கூட அழவே இல்ல
ஏன்னு கேட்டா
அப்பா 7.30க்கு தன் வருவாரு
அதனால நான் 7.20 க்கு அழரேன்னு சொல்றா

***********************************************************************************************************

இரண்டு கம்பளி போர்த்தியும்
குளிரும் பாருங்க அப்பத்தான் தோனும்

நமக்கு ஏன்டா இன்னும் கல்யாணம்
ஆகளையேனு

பொண்டாட்டி கேக்குற கேள்விக்கு பதில்
சொல்ல முடியுமா ஏசி ரூம்லயும் வேர்க்கும் பாருங்க அப்பதான் தோனும்

ஏன்டா கல்யாணம் பண்ணுனோம்னு

You must be logged in to post a comment Login