Jokes

வாங்க சிரிக்கலாம்…!

By  | 

தரகரே பொன்னு
கருப்பாயிருந்தாலும்
சிவப்பாயிருந்தாலும் பரவாயில்லை
ஆனா பொன்னு கண்டிப்பா
ஸ்மார்ட் போன் வச்சுருக்கனும்

தரகர்: ஏன் சார் ?

ஏனா ஸ்மார்ட் போன்
வச்சுருக்க பொன்னு தான் குனிஞ்ச தலை நிமிராம போகும்

***********************************************************************************************************

Wife: உங்கள பார்த்து கிட்டே இருக்கனும் போல இருக்கு

Husband: அப்பவே ஜோசியர் சொன்னாரு கல்யாணத்துக்கு அப்புறம்
சனி பார்வை உங்க மேலேயே இருக்கும்னு

***********************************************************************************************************

கணவன்:  ஏன்டி அப்படி தலைபோற அவசரம்னு
ஆபீசுக்கு வந்திருக்கிறே

மனைவி:  நம்ம வீட்டு வேலைக்காரியைக் காணோம் நீங்களாவது
ஆபிசுல இருக்கீங்களான்னு….
பார்த்துட்டு போகத்தான் வந்தேன்

***********************************************************************************************************

ஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு
உங்க பையனுக்கு பதில் சொல்லதெரியலை மேடம்

அம்மா: அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார்

***********************************************************************************************************

காதலிக்கும் மனைவிக்கும் என்ன வித்தியாசம்?

காதலியை சொந்தமா பைக் வாங்கி கூட்டிட்டுப்போகனும்.
மனைவியை அவ அப்பா வாங்கித் தரும் பைக்கிலே அழைச்சுட்டுப் போகலாம்.

***********************************************************************************************************

என் கணவருக்கு தூரப் பார்வை இருக்கு

எப்படி கண்டுபிடிச்சீங்க?
எப்பவும் பக்கத்திலே இருக்கிற நான்
தெரிய மாட்டேங்கறேன்

ஆனா தூரத்திலே இருக்கிரு பெண்ணெல்லாம்
அவர் கண்ணுக்கு பளிச்சுன்னு தெரியுது.

You must be logged in to post a comment Login