Home Garden

வீட்டுத் தோட்டத்தில் கற்றாழை இலையை கொண்டு கற்றாழை செடி வளர்ப்பது எப்படி?

By  | 

சோற்றுக் கற்றாழை அதிகளவில் தரிசுநிலப் பகுதிகளிலேயே பயிரிடப்படுகிறது. ஆஸ்துமா, குடல் புண், உடல் உஷ்ணம் போன்ற நோய்களுக்கு கற்றாழை ஒரு நல்ல மருந்தாகும்.

இதன் தோல்பகுதியை சீவி எடுத்து, மோர், பாலில் கலந்து குடித்து வந்தால் நோய்கள் குணமாகும். இது ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கும் ஒரு மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது.

இதுதவிர மூலிகை சவர்க்காரம், ஷேம்போ, மருந்து, மாத்திரைகள் தயாரிக்க மூலப்பொருளாகவும் பயன்படுகிறது.

கற்றாழை செடி வளர்ப்பது எப்படி

முதலில் கற்றாழை செடியின் இலை வேண்டும்.

இலை வேர்களை உருவாக்கி வளரக்கூடியது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இலையில் இருந்து கற்றாழை வளர முடியும் .

கற்றாழை செடியில் இருந்து 8 சென்றி மீற்றர் (3.15 இன்ஞ்ச்) கொண்ட ஒரு இலையை தண்டிலிருந்து கீழ் நோக்கி வெட்டி எடுக்கவும். இது உங்களுடைய சொந்த கற்றாழை செடி இல்லை எனில் முதலில் உரிமையாளரிடம் வெட்டுவதற்கு அனுமதி கேற்கவும்.

வெட்டிய கற்றாழை இலையை இரண்டு வாரங்கள் வெப்பமான இடத்தில் வைக்கவும். இவ்வாறு வைப்பதால் மண்ணினால் ஏற்படும் பாதிப்பு குறையும். ஒரு பாதிக்கப்பட்ட கற்றாழை இலை மிக நீண்ட காலம் வாழ முடியாது.

கீழே துழை போட்ட மண் தொட்டி அல்லது சிமெண்ட் தொட்டியை எடுத்து கொள்ளவும்.

ஒரு பகுதி மணலை ஒரு பகுதி மண் கலவையுடன் கலந்து தொட்டியில் மண்ணை நிரப்பவும். PH நிலை 6.0 முதல் 8.0 வரை இருக்க வேண்டும். PH அளவு அதிகமாக இல்லை என்றால், சில தோட்டக்கலை சுண்ணாம்பு சேர்க்கவும்.

கற்றாழை இலையை மண்தொட்டி மண்ணில் இருந்து சுமார் மூன்றில் ஒரு பங்கு இருப்பதாக நாட்ட வேண்டும்.

நன்கு வெப்பமான மற்றும் சூரிய ஓளி கிடைக்கும் இடத்தில் தொட்டியை வைத்து வளர்க்கவும்.

முதல் நான்கு வாரங்களுக்கு, மண்ணை ஈரமான வைக்க வேண்டும்.

பத்து நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்.

You must be logged in to post a comment Login