General

வெடித்து சிதறியது… இரண்டாம் உலகப்போர் குண்டு!

By  | 

இரண்டாவது உலகப் போரானது 1939 இலிருந்து 1945 வரையிலான ஆண்டு காலப்பகுதிகளில் உலக நாடுகளுக்கு இடையே நிலவியது.

இந்தப் போரின்போதுதான் மனித வரலாற்றில் முதன்முறையாக அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டது. அதன் தாக்கமும் போரினால் ஏற்பட்ட தடயங்களும் பாதிப்புகளும் இன்றளவும் அழியாமல் உள்ளது.

இதனால் மீண்டும் ஒரு அணு ஆயுதம் பயன்படுத்தப்படக்கூடாது என்பதில் உலக நாடுகளும் கவனமாக இருந்து வருகின்றன.

இதற்கிடையில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் பல்வேறு இடங்களில் அவ்வப்போது கண்டெடுக்கப்படுகின்றன. அவற்றில் பல குண்டுகள் செயலிழந்த நிலையில் இருந்தாலும், சில குண்டுகள் இன்றும் வெடிக்கக்கூடிய நிலையில் இருக்கின்றன. அந்த வகையில் அண்மையில் போலந்து நாட்டின் பயாஸ்ட் (piast) கால்வாயில் 2ஆம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அது கடந்த 1945ஆம் ஆண்டு பிரிட்டன் வீசிய டால்பாய் வெடிகுண்டு என்றும் அதன் எடை 5 ஆயிரத்து 400 கிலோ என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பணியில் போலந்து கடற்படை தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக நீருக்கடியில் வெடித்துச் சிதறியது. இதனால் தண்ணீர் மேலே நீண்ட உயரத்துக்கு எழுந்தது. இருப்பினும் நீருக்கடியில் வெடித்ததில் எந்த ஒரு உயிர்சேதமும் ஏற்படவில்லை எனக் கூறியுள்ள அந்நாட்டு அதிகாரிகள், தற்போது ஆபத்து நீங்கியதாக தெரிவித்துள்ளனர்.

தண்ணீரில் வெடித்த குண்டு ஊருக்குள் வெடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்! எத்தனை உயிர்கள் போயிருக்கும்! எத்தனை கட்டடங்கள் தரைமட்டமாகி இருக்கும்! அம்மாடி, நினைத்தாலே படக் படக்!!

இந்தக் காணொளியை நீங்களே பாருங்க…

https://www.abc.net.au/news

 

You must be logged in to post a comment Login