Uncategorized

வெளியே சென்று திரும்புபவர்கள் கடைபிழக்க வேண்டியவை

By  | 

– துபாய் பொலிஸ்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டாலும், பலரும் கண்டுக்கொள்வதாக இல்லை. நாம் அதிகம் தொடக்கூடிய கதவுகள், சுவிட்சுகள், கைப்பிடிகள், மேசைகள், குழாய்கள் போன்றவைகளை அவ்வபோது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் (சிடிசி) பரிந்துரைத்துள்ளது. மேலும், மக்கள் வெளியே செல்வதற்கும், வீடு திரும்புவதற்கும் சில தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

துபாயில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறுபவர்கள், மாஸ்க் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு ஆயிரம் முதல் 10 ஆயிரம் திர்ஹாம் வரையில் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், வெளியே சென்று வீடு திரும்பும் மக்கள், பாதுகாப்பாக இருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை துபாய் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* வீடு திரும்பும்போது, ​​யாரையும் அல்லது எதையும் தொடுவதைத் தவிர்க்கவும். நீங்கள் தொட்ட அனைத்து மேற்பரப்புகளையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யுங்கள்.

* உங்கள் காலணிகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில், அதுவும் வீட்டிற்கு வெளியே அல்லது நுழைவாயிலில் கழற்றி, அவற்றை கிருமி நீக்கம் செய்ய மறக்காதீர்கள்.

* உங்கள் பை, பர்ஸ், சாவி, தொலைபேசி மற்றும் வாங்கி வந்த பொருட்கள் ஆகியவற்றை வாசலில் ஒரு பெட்டியில் விட்டுவிட்டு, அனைத்தையும் கிருமி நீக்கம் செய்யுங்கள்.

* கையுறைகளை அணிந்து உங்கள் பொருட்களை கிருமி நீக்கம் செய்யுங்கள்.

* வாங்கி வந்த பொருட்களில் உள்ள அனைத்து பிளாஸ்டிக் கவர்களையும் அகற்றவும்.

* கையுறைகளை அணிந்து உங்கள் காலணிகளை கிருமி நீக்கம் செய்யுங்கள்.

* நீங்கள் பயன்படுத்திய கையுறைகள் மற்றும் முகமூடியை அகற்றவும்.

* உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் குறைந்தது 20 விநாடிகள் கழுவ வேண்டும்.

* உங்கள் துணிகளை கழற்றி அதை துவைத்திடுங்கள் அல்லது தனியாக வைத்துவிடுங்கள்.

மேற்கூறிய பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள், வெளியே சென்று திரும்பும் போது செய்ய வேண்டியதாக துபாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You must be logged in to post a comment Login