Cinema

வேறு எதுவும் உண்மையல்ல – அனுஷ்கா நெகிழ்ச்சி

By  | 

தாய்மை ஒரு பெண்ணை நிச்சயம் மாற்றிவிடும். தாய்மை அடையும் வரை இருக்கும் பெண்ணை விட தாய்மை அடைந்த பின் இருக்கும் பெண்ணுக்கு ஈடு இணை வேறு எதுவும் இல்லை. புதிதாக ஒரு உயிருக்கு உயிர் கொடுப்பதுதான் தாய்மை. அந்த தாய்மையின் அழகை விவரிக்க வார்த்தைகளே கிடையாது. அப்படி ஒரு அனுபவத்தில்தான் அனுஷ்கா சர்மா இருக்கிறார் போலிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் காதல் மனைவியான அனுஷ்கா சர்மா, 2021 ஜனவரி மாதத்தில் குழந்தையைப் பெற்றெடுக்கப் போகிறார். அது பற்றிய அறிவிப்பை அவர்கள் வெளியிட்டதற்கே பல லட்சம் பேர் வாழ்த்து தெரிவித்தார்கள்.

நேற்று இன்ஸ்டாகிராமில் தன் தாய்மை புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு, “உங்களிடம் ஒரு உயிர் வளர்வதை விட வேறு எதுவும் தாழ்மையானதும், உண்மையானதும் அல்ல. இதை மகிழ்ச்சி உடன் அனுபவிக்கிறேன்?,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

அனுஷ்காவின் இந்தப் பதிவிற்கு, “ஒரே பிரேமில் என் ஒட்டு மொத்த உலகம்” எனக் குறிப்பிட்டுள்ளார் விராட் கோலி. அனுஷ்காவின் இந்தப் புகைப்படத்திற்கு வழக்கம் போல லட்சக்கணக்கான லைக்குகள் விழுந்து வருகிறது.

You must be logged in to post a comment Login