Cinema

வைரலாகும் சினேகாவின் வளைகாப்பு புகைப்படங்கள்

By  | 

நடிகை சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் அவருக்கு சீமந்தம் நடத்தப்பட்டது. மஞ்சள் நிற பட்டுப்புடவையில் சினேகா மிகவும் அழகாகவும், சந்தோஷமாகவும் இருந்தார்.

வளைகாப்பு நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சினேகாவை வாழ்த்தினார்கள். சினேகா, பிரசன்னா தம்பதிக்கு 4 வயதில் விஹான் என்கிற மகன் உள்ளார்.

விஹான் பிறந்தபோது சினேகா படங்களில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்திருந்தார். சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் மூலம் மீண்டும் நடிக்கத் துவங்கினார்.

இந்நிலையில் மீண்டும் கர்ப்பமாகியுள்ள அவர் குழந்தை பிறந்து அது ஓரளவுக்கு வளரும் வரை பிரேக் எடுக்க திட்டமிட்டுள்ளாராம்.

சினேகா தன் வாழ்வில் வந்த பிறகே தனக்கு பல நல்லது நடப்பதாக நினைக்கிறார் பிரசன்னா.

கோலிவூட் ரசிகர்கள் கொண்டாடும் ஜோடிகளில் ஒன்று சினேகா-பிரசன்னா ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.

சினேகா துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

புதுப்பேட்டை படத்தை அடுத்து 13 ஆண்டுகள் கழித்து சினேகாவும், தனுஷும் சேர்ந்து நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login