Health

ஸ்மார்ட் கைத்தொலைபேசியை அதிகம் நேரம் பயன்படுத்தினால் ஆபத்து

By  | 

அதிக நேரம் ஸ்மார்ட் கைத்தொலைபேசியில் மூழ்கி கிடப்பவர்களுக்கு உடல் பருமன் உள்பட பல கொடிய நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய நவீன உலகில் ஸ்மார்ட் கைத்தொலைபேசி என்பது வாழ்வில் இன்றியமையாத பொருளாகி விட்டது.
ஸ்மார்ட் கைத்தொலைபேசிகள் பல்வேறு நன்மைகளை அளித்தாலும் இளைய தலைமுறையினர் இதில் அதிக நேரம் செலவிடுவதால் உடல் மற்றும் மனதளவில் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.

இந்நிலையில் அதிக நேரம்
ஸ்மார்ட் கைத்தொலைபேசி பயன்படுத்துவதால் ஏற்படும் மாற்றம் குறித்து 19 முதல் 20 வயதிற்குட்பட்டவர்களிடம் ஆய்வு ஒன்றை கொலோம்பியா நாட்டின் சிமோன் போலிவர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். 700 ஆண்கள், 300 பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை அளித்துள்ளது. ஒருவர் நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் முதல் அதற்கு அதிகமான நேரம்
ஸ்மார்ட் கைத்தொலைபேசியை பயன்படுத்துவதால் உடல் உழைப்புக்கான நேரம் முற்றிலும் குறைந்து விடுகிறது. இதனால் உடல் பருமன் ஏற்படுகிறது. மேலும்,
ஸ்மார்ட் கைத்தொலைபேசி பயன்பாட்டால் புற்றுநோய், இதய நோய், நீரிழிவு நோய் போன்ற உயிரை கொல்லும் கொடிய நோய்கள் உண்டாக அதிக வாய்ப்புகள் உள்ளது. அதிக நேரம் ஸ்மார்ட் கைத்தொலைபேசி மூழ்கி கிடப்பதால் தனி நபரது நடத்தை மற்றும் ஒழுக்கத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனால், மனரீதியிலான பிரச்சனைகளை உண்டாக்குகிறது. எனவே,
ஸ்மார்ட் கைத்தொலைபேசி எப்போதும் மூழ்கி கிடக்கும் நபர்களின் இறப்பு என்பது சராசரி மனிதர்களின் இறப்பு காலத்தை விட மிக விரைவாக அமைந்து விடுகிறது என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

You must be logged in to post a comment Login